Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்

2

அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்

இலங்கை நிரந்தர / தொண்டர் வான்படையில் ஆண் / பெண் நேரடி அரசாணையமர்வு அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் கீழ்க்காணும் பிரிவுகளில் உள்ளன :

(அ) தொழிநுட்ப பொறியியல் பிரிவு
(ஆ) இலத்திரனியல் பொறியியல் பிரிவு
(இ) பல் வைத்தியப் பிரிவு
(ஈ) பரிபாலன மிருக வைத்தியப் பிரிவு
(உ) பரிபாலன விவசாயப் பிரிவு
(ஊ) பரிபாலன நீதிப் பிரிவு
(எ) பரிபாலன கல்விப் பிரிவு

2. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளையுடைய விண்ணப்பதாரி களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன :-

(அ) தொழினுட்ப பொறியியல் பிரிவு.- தொழில்நுட்ப பொறியியல் அதிகாரி – ஆண் (நிரந்தர) :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்ற 4 வருட முழுநேர இயந்திரவியல்ஃ மோட்டார் வாகன பொறியியல் பிஎஸ்சி பட்டச் சான்றிதழ் அல்லது 3 வருட முழுநேர இயந்திர வியல் பொறியியலில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பெற்ற தொழிநுட்ப சான்றிதழ் (என்டீடி) அல்லது இலங்கை உயர்தொழிநுட்ப கல்வி நிலையத்தில் 3 1ஃ 2 வருட முழுநேர இயந்திரவியல் பொறியியல் பெற்ற உயர் தேசிய டிப்ளோமா (எச்என்டிஈ) அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்ற தொழிநுட்பவியல் டிப்ளோமா

(ஆ) இலத்திரனியல் பொறியியல் பிரிவு.-

இலத்திரனியல் பொறியியல் அதிகாரி – ஆண் (நிரந்தர) :

குறைந்தபட்சம் 4 வருட இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் அல்லது 4 வருட பௌதிக விஞ்ஞானம் (மேஜர்) உடன் இலத்திரனியல் ஃ தொலைத்தொடர்பு பிரதான பாடமாக பிஎஸ்சி பட்டம் அல்லது 3 வருட பௌதிக விஞ்ஞானம் விஞ்ஞானமாணி பட்டத்துடன் இலத்திரனியல் தொலைத்தொடர்பானது பிரதான பாடமாக அல்லது 3 வருட டிப்ளோமா இலத்திர னியல்ஃ தொலைத் தொடர்பு பொறியியல்

வலையமைப்பு பரிபாலகர் அதிகாரி – ஆண் / பெண் (நிரந்தர) :

4 வருட கணனி தொடர்பான பிரிவில் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் அல்லது 3 வருட கணனி தொடர்பான பிரிவில் விஞ்ஞானமாணி பட்டம் அல்லது கணனி விஞ்ஞானத்தில் பிரதான பாடமாக விஞ்ஞானமாணி பட்டம் அல்லது எச்என்டீ அல்லது என்ஐபிஎம் டிப்ளோமா அல்லது வலையமைப்பு பரிபாலகர் சமனான ஒலி மற்றும் அறிவு மற்றும் அனுபவத்துடன்

மென்பொருள் விருத்தியாளர் – ஆண்ஃ பெண் (நிரந்தர) :

4 வருட பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம், கணனி தொடர்பான பிரிவில் அல்லது 3 வருட விஞ்ஞானமாணி பட்டம், கணனி தொடர்பான பிரிவில் விஞ்ஞானமாணி பட்டத்துடன் கணனி விஞ்ஞானத்தில் பிரதான பாடம் அல்லது எச்என்டீ அல்லது என்ஐபிஎம் டிப்ளோமா அல்லது மென்பொருள் விருத்தி யாளர் சமனான ஒலி மற்றும் அறிவு மற்றும் அனுபவத்துடன்

தகவல் / பாதுகாப்பு விசேட நிபுணர் :

கணனி தொடர்பான பிரிவில் 4 வருட பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் அல்லது கணனி தொடர்பான பிரிவில் 3 வருட விஞ்ஞானமாணி பட்டம் அல்லது பிரதான பாடமாக கணனி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி பட்டத்துடன் கணனி ; அல்லது எச்என்டீ அல்லது என்ஐபிஎம் டிப்ளோமா தகவல்ஃ பாதுகாப்பு விசேட நிபுணர் சமனான நல்ல அறிவு மற்றும் அனுபவத்துடன்

இணையதள வடிவமைப்பாளர் :

4 வருட கணனி பொறியியல்ஃ தகவல் தொழிநுட்பம்ஃ கணனி விஞ்ஞானத்தின் விஞ்ஞானமாணி அல்லது 3 வருட கணனி பொறியியல்ஃ தகவல் தொழிநுட்பவியல்ஃ கணனி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி பட்டம் அல்லது பிரதான பாடமாக கணனி விஞ்ஞானத்துடன் விஞ்ஞானமாணி பட்டம் 3 வருட தகவல் தொழிநுட்பம் தொடர்புபட்ட பட்டம் அல்லது விஞ்ஞானமாணி பட்டம் அல்லது எச்என்டீ அல்லது என்ஐபிஎம் டிப்ளோமா அல்லது அதற்கு சமமான தகைமையுடன் குறைந்த பட்சம் 1 வருட அனுபவம்
குறிப்பு.- சகல விண்ணப்பதாரர்களும் எழுத்து, செயன் முறைப் பரீட்சைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

சகல விஞ்ஞானமாணி பட்டங்களும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களினின்றும் பெற்றிருத்தல்

(இ) பல் வைத்தியப் பிரிவு.-

பல் அறுவை மருத்துவர் – ஆண்ஃ பெண் (நிரந்தரஃ தொண்டர்)

ப்ளயிட் லெப்டினன்ட் – பிடீஎஸ் அல்லது அதற்குச் சமனான தகைமையுடன் எஸ்எல்எம்சி பதவி

பல் மருத்துவ மாணவன் – ஆண்ஃ பெண் (நிரந்தர)

பைலட் ஒபீசர் – பிடீஎஸ் 2 வருட ப{ர்த்தியும் 3 ஆம் வருட ஆரம்பமும்
ப்ளையிங் ஒபீசர் – இறுதி பிடீஎஸ் முதற்கட்டம் முழுமையான பிறகு இறுதி வருடம் பிடீஎஸ் பயிலுதலும்

(ஈ) பரிபாலன மிருக வைத்தியப் பிரிவு.-

மிருக வைத்திய அதிகாரி – ஆண் (நிரந்தரஃ தொண்டர்)
பேராதனை பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியராக பட்டம் பெற்றிருத்தலுடன் இலங்கை மிருக வைத்திய சபையில் அங்கீகாரம் பெறல் வேண்டும்

(உ) பரிபாலன விவசாயப் பிரிவு.-

விவசாய அதிகாரி – ஆண் (நிரந்தரஃ தொண்டர்)

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சகல பிஎஸ்சீ விவசாய விஞ்ஞான பட்டம் அல்லது அதற்குச் சமனான தகைமை இருத்தல்

(ஊ) பரிபாலன நீதிப் பிரிவு.-

நீதி அதிகாரி- ஆண்ஃ பெண் (நிரந்தரஃ தொண்டர்) 

நீதிப்பட்டம் பெற்றிருத்தலுடன் 1 வருட வழக்கு தொடுக்கும் அனுபவம். எம்ஓய{ உம் ஆவணம் தொடர்புபடுத்தும் திறமையும்

(எ) பரிபாலன கல்விப் பிரிவு.-

ஆங்கில மொழி விரிவுரையாளர் – ஆண் (நிரந்தரஃ தொண்டர்)
க. பொ. த. (உ. த.) பரீட்சையில் எந்தப் பிரிவிலாவது 3 சாதாரண சித்தியும் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆங்கில மொழி தொடர்பான 3 வருட கற்கைநெறி வெற்றிகரமாக ப{ர்த்தியான பிறகு ஆங்கில மொழி ஆசிரியராக குறைந்தபட்சம் 1 வருட காலம் அனுபவம் இருத்தல்

அல்லது

க. பொ. த. (உ. த.) பரீட்சையில் எந்தப் பிரிவிலாவது 3 சாதாரண சித்தியும் மற்றும் தேசிய கல்வி திணைக்களத்தில் ஆசிரிய கலாசாலையில் 2 வருட ஆங்கில மொழி தொடர்பான கற்கைநெறி வெற்றிகரமாக ப{ர்த்தியான பிறகு ஆங்கில மொழி ஆசிரியராக குறைந்தபட்சம் 3 வருட காலம் அனுபவம் இருத்தல்

அல்லது

ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்தில் பிஏஃ பிஎஸ்சி பட்டம் பெற்றிருத்தல் அல்லது ஆங்கிலம் ஒரு பாடமாக எம்ஏஃ எம்எஸ்சி பட்டம் பெற்றிருத்தல்

அல்லது

ஆங்கில மொழி மூலம் கலைமாணிஃ விஞ்ஞானமாணி பட்டம் பெற்றிருத்தலுடன் ஆங்கில மொழி ஆசிரியராக ஒரு வருட கால அனுபவம் இருத்தல் வேண்டும்

அல்லது

எல்லா துறைகளிலும் தொழில்சார் ஆங்கில மொழி ஆசிரியராக ஒரு (1) வருட கற்பித்தல் அனுபவத்துடன் முதுமாணி பட்டம் (கலைமுதுமாணிஃ விஞ்ஞானமுதுமாணி) பெற்றிருத்தல் அல்லது ஆங்கில மொழி ஒரு பாடமாக இருப்பதுடன் முதுமாணிப்பட்டம் (கலைமுதுமாணிஃ விஞ்ஞான முதுமாணி) பெற்றிருத்தல் அல்லது மாணி பட்டம் (கலைமாணிஃ விஞ்ஞாமாணி) மற்றும் கல்வி டிப்ளோமா பெற்றிருத்தல்

3. வேறு தகைமைகள் :

(அ) தேசிய இனம்.- ஓர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்;
(ஆ) குடியியல் நிலை.- விவாகமானவர்ஃ விவாகமாகாதவர்;
(இ) பால்.- ஆண்ஃ பெண் :
(ஈ) உயரம்.- ஆண்கள் 5 அடி 5 அங்குலமும் அதற்கு மேலும்
பெண்கள் 5 அடி 4 அங்குலமும் அதற்கு மேலும் ;
(உ) வயது.- 2012, சனவரி 31 ஆந் திகதியன்றுள்ளவாறு ;
(ஊ) நிறை.- பிஎம்ஐ ஸ்ரீ நிறை (கி)
உயரம் 2(மீ)

(1) தொழிநுட்பம் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பிரிவு.- வயது 30 இற்கு கூடாதிருத்தல் வேண்டும் ;

(2) பல் வைத்தியப் பிரிவு.-

பல் வைத்திய அதிகாரி – வயது 35 இற்கு கூடாதிருத்தல் வேண்டும் ; பல் வைத்திய மாணவன் – வயது 30 இற்கு கூடாதிருத்தல் வேண்டும் ;

(3) பரிபாலன மிருக வைத்தியப் பிரிவு, பரிபாலன விவசாயப் பிரிவு, பரிபாலன நீதிப் பிரிவு, பரிபாலன கல்விப் பிரிவு – வயது 35 இற்கு கூடாதிருத்தல் வேண்டும்.

(எ) மார்பு.- ஆண் 32″” (குறைந்தது)
(ஏ) பார்வை வர்ணப் பதிவு மட்டம் .- ஊP2
(ஒ) தொலைபார்வை.- இரண்டு கண்களிலும் 6ஃ 6 (மூக்குக் கண்ணாடியுடன் அல்லது மூக்குக் கண்ணாடி பயன்படுத்தப் படாமல்)
4. தேவையான உயரம், நிறை முதலியவை இல்லாதிருந்தாலும் வான்படைக்கு ஒருவரின் தேவை அல்லது சேவை நன்மை பயக்கும் என வான்படை தளபதியால் ஏற்றுக்கொள்ளப்படும் இடத்தில் அவரின் விண்ணப்பம் விசேட தகைமைகளைக் கொண்டிருப்பின் அது கவனத்திற் கொள்ளப்படும்.
5. வான்படை ஆளுனரால் நியமிக்கப்படும் வைத்திய பரீட்சையில் தேர்ச்சி பெறக்கூடிய தேகாரோக்கியம் உடையவராயிருத்தல் வேண்டும்.
6. விளையாட்டுத்துறையில் ஈட்டியுள்ள அதியுயர் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

7. அரச கரும மொழித் தேவைப்பாடுகள்.-

தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுநாடிகள் இலங்கைக் குடியரசின் 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டத்தின் ஏற்பாடுகளைச் செயற்படுத்து

(ஈ) சேவைக் கொடுப்பனவுகள் :

(1) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ரூபா 5,850 ;
(2) உற்சாகமூட்டுக் கொடுப்பனவு ஐந்து வருடங்களின் பின்பு ஒவ்வொரு மாதமும் ரூபா 250 ;
(3) கடினப்படி மாதமொன்றுக்கு ரூபா 600 ;
(4) விசேட கொடுப்பனவு யுத்தப் பிரதேசங்களில் பணிபுரிபவர் களுக்கு மாதமொன்றுக்கு ரூபா 5,000 ;

(5) விசேட கொடுப்பனவு ரூபா 3,000 (ஒவ்வொரு வேலை நாட்களுக்கும் ரூபா 100 வீதம்)

(6) மேலதிகக் கொடுப்பனவு (மாதமொன்றுக்கு 1,000)

(7) சீருடை பேணுதல் படி (மாதமொன்றுக்கு ரூபா 255)

(8) சேவையாளர் படி : மாதமொன்றுக்கு ரூபா 637.50 (வெளியிலிருந்து வசிக்க அனுமதி பெற்றிருந்தால்)

(9) உணவுப்படி மாதமொன்றுக்கு ரூபா 11,464.50 (வெளியிலிருந்து வசிக்க அனுமதி பெற்றிருந்தால்)

(10) ஏற்புடைத்தாகுமிடத்து தகைமைப்படி (மாதமொன்றுக்கு ஆகக்கூடியது ரூபா 637.50 வரை)

(11) அடிப்படைப் படியில் 5…

(12) ஆண்டொன்றுக்கு மூன்று சோடி விடுமுறை புகையிரதப் பிரயாணப்பத்திரம் (அலுவலருக்கும், மனைவிக்கும், பிள்ளை களுக்கும்)

(13) அதிகாரி விடுதிகளில் வசிக்கும் அலுவலருக்கு மாதமொரு தடவை விடுதியிலிருந்து சொந்த இருப்பிடம் போய்வருவதற்கு மேலதிகமாக ஒரு சோடி புகையிரதப் பிரயாணப் பத்திரம் அல்லது வசு வண்டிக் கட்டணச் செலவு மீளளிப்பு

(14) இலவச சீருடையும் பிற சார்பான பொருட்களும்

(15) இலவச மருத்துவ வசதிகள் (ஏற்புடைத்தாயின் குடும்பத்தின ருக்கும்)  

(16) திருமணமான அலுவலருக்கு (வெளியிலிருந்து வசிக்க அனுமதிபெற்றிருந்தால்) மாத்திரம் தொழில் புரியும் இடத்திலிருந்து 30 மைல்களுக்கு உட்பட்டதான இடத்திற்குப் பயணம் செய்வதற்கு இ. போ. ச. இலவசப் பயணச்சீட்டு வசதிகள் வழங்கப்படும்.

(17) அரசாங்க குடிமனைகளில் இருப்பாட்சி செய்யாத திருமண மான அலுவலர்களுக்குப் (பைலற் ஆபீசர் இலிருந்து குறூப் கப்ரன் அதற்கு மேலும் மாதமொன்றுக்கு ரூபா 1,850 இலிருந்து ரூபா 4,250 வரை) வாடகைப்படிகள்; கொடுபடற் பாலனவாகும்.

(18) சேவைக் கொடுப்பனவு ரூபா 300, ரூபா 400, ரூபா 500.
(வைத்தியர்களுக்கு முடிவுற்ற சேவைக்காலத்தைப் பொறுத்து).

(19) மேலதிக கொடுப்பனவு ரூபா 1,500 (வைத்தியர்களுக்கு மாத்திரம்).
(20) 1ஃ 20 கொடுப்பனவு, மாதமொன்றுக்கு – அடிப்படைச் சம்பளம் ஒ 1ஃ 20 ஒ 3 நாட்கள் மட்டும். (வைத்தியர்களுக்கு மாத்திரம்).

16. ஓய்வு{தியங்கள்ஃ பணிக்கொடுப்பனவுகள் என்பன காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் வான்படை ஓய்வு{திய பணிக்கொடுப்பனவு சட்டச் சேவையின் நியதிகளின்படி செலுத்தப்படு மாகும்.

வான்படை அலுவலர் அனைவரும் விதவைகள் அனாதைகள் ஓய்வு{திய (ஆயுதப்படைகள்) திட்டத்திற்கு உதவுதொகை செலுத்துனர் களாவர். உதவுதொகைகளின் விகிதங்கள் 1970 ஆம் ஆண்டின் விதவைகள் அனாதைகள் ஓய்வ{திய (ஆயுதப்படை) திட்டத்தின்படியாகும்

17. விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்.- (அ) விண் ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்ட படிவத்தின் நியதிகளின்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும். எல்லாக் கூடுகளும் கூடியவரை விரிவான விவரங்களுடன் தெளிவாக தமது சொந்த கையெழுத்தால் நிரப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் 2012.01.23 ஆந் திகதியன்று நண்பகல் 12.00 மணிக்கு முன் “பிரதம ஆட்சேர்ப்பு அலுவலர், இலங்கை விமானப்படை, ஏக்கலை, கொட்டுகொட” என்ற முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

(பதிவுத் தபாலில் அனுப்பாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா). விண்ணப்பம் அனுப்பப்படும் கடித உறையில் இடதுபக்க மேல் மூலையில் “அரசாணையமர்வு அலுவலர்களுக்கான விண்ணப்பம் …………………. பிரிவு” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

முடிவுத் திகதியின் பின்னர் கொட்டுகொட, ஏக்கல, இலங்கை, வான்படையை வந்தடைவனவும், இந்த அறிவித்தலின் தேவைப்பாடுகளுக்கு அமையாதவையுமான விண்ணப்பங்கள் கவனிக்கப்படமாட்டா.

(ஆ) அரசாங்க சேவையில் ஃ கூட்டுத்தாபனத்தில்ஃ சபையில்ஃ குடியியல் தாபனத்தில் உள்ள விண்ணப்பகாரர்களது விண்ணப்பம் தத்தம் திணைக்களத்தின் ஃ சபையின்ஃ குடியியல் தாபனத்தின் தலைமையதி காரிகள் ஊடாகவே அனுப்புதல் வேண்டும். இந்த விண்ணப்பங்கள், விண்ணப்பகாரர் தெரிவுசெய்யப்படின் விடுவிக்கப்படுவர் என்ற சான்றிதழொன்றை பெற்றிருத்தல் வேண்டும்.

(இ) விண்ணப்பகாரர் தமது விண்ணப்பங்களுடன் பின்வரும் ஆவணங்களின் பிரதிகளை அனுப்புதல் வேண்டும் :-

(1) பிறப்புப்பதிவு சான்றிதழ்

(2) விண்ணப்பித்த பிரிவுக்கு தேவையான கல்வித் தகைமைகளை ஆதாரப்படுத்தும் சான்றிதழ்

(3) விண்ணப்பத்தாரரை நன்கு அறிந்தவரான பொறுப்புவாய்ந்த இருவரிடம் இருந்து அண்மையில் பெற்ற இரு குணநலச் சான்றிதழ்கள்

(4) விளையாட்டுத்துறைகள் பயிலிளவல் பயிற்சி முதலியவற்றை ஆதாரப்படுத்தும் சான்றிதழ்கள்.

(5) விண்ணப்பத்தாரருக்கு உரித்தான வேறு சான்றிதழ்கள்.

குறிப்பு.- சான்றிதழ்களின் மூலப்பிரதிகள் விண்ணப்ப தாரிகள் முதலாம் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப் படும்பொழுது கட்டாயமாகக் வைத்திருத்தல் வேண்டும்.

18. விண்ணப்பத்தில் கூற்று எதுவும் பிழையானதெனக் காணப்படுமிடத்து, தெரிவுசெய்யப்படுமுன் கண்டுபிடிக்கப்பட்டால் விண்ணப்பகாரரைத் தகைமையற்றவராக்கும். அத்துடன் தெரிவு செய்யப்பட்டபின் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

19. தெரிவுசெய்தல் நேர்முகப்பரீட்சை முதலியன.- (அ) மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனையைப் பு{ர்த்திசெய்பவர்களுள் இருந்து மட்டும் முதனிலை நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். அவ்வாறு தெரிவு

செய்யப்படும் விண்ணப்பதாரிகள் வான்படை ஏவுநரின் பணிப்பிற் கிணங்க வைத்திய சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தெரிவுச்சபையொன்றினால் இறுதித் தேர்வு நடாத்தப் படும்.-

(ஆ) நேர்முகப் பரீட்சை ஒன்றின் பின்னர் இறுதி தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு அத்தகைய நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்படும் இடம், நேரம், திகதி ஆகியன பற்றி எழுத்தில் அறிவிக்கப்படும். இது தொடர்பாக எதுவித பயணச் செலவோ அல்லது வேறு செலவோ வழங்கப்பட மாட்டா.

(இ) விண்ணப்பகாரர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்  

(ஈ) இறுதி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவுசெய்யப்பட்ட விண் ணப்பதாரிகள் வைத்திய சபையொன்றினால் நடாத்தப்படும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்  

(உ) ஒரு தேர்வுநாடியைச் சிபார்சு செய்ய விரும்புவோர் அவருக்கு ஒரு நற்சான்றிதழைக் கொடுப்பதன் மூலம் அங்ஙனம் செய்யலாம். தேர்வுநாடி ஒருவரின் தெரிவில் எந்தவிதமான ஆதரவையும் தேடுதல்

அல்லது

செல்வாக்கைப் பிரயோகிக்க முயற்சித்தல் அத்தகைய விண்ணப்பகாரரை தகுதியிழக்கச் செய்யும்.

(ஊ) நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு அதுபற்றி அறிவிக்கப்பட மாட்டாது.

எச். டி. அபேவிக்ரம, எயார் மார்ஷல்,
வான்படை தளபதி.
தலைமை அலுவலகம்,
இலங்கை வான்படை,
த. பெ. எண். 594,
கொழும்பு.

Leave A Reply

Your email address will not be published.