Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

அல் ஆலிம் சான்றிதழ் பரீட்சைகள்

2

அல் ஆலிம் சான்றிதழ் பரீட்சைகள்

(அ) 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கி அமுலாகும் வகையில், 1973 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 20 ஆந் திகதி பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டிருந்த அல் ஆலிம் பரீட்சைகளுக் கான பிரமாணங்களும் பாடத்திட்டங்களும் இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளனவென இத்தால் அறிவிக்கப்படுகிறது.

(ஆ) திருத்தியமைக்கப்பட்டுள்ள பரீட்சை ஒழுங்குவிதிகளும் பாடத்திட்டங்களும் அல் ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ்ப் பரீட்சை தொடர்பில் 2013 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்தும், அல் ஆலிம் ஸானவிய்யா சான்றிதழ்ப் பரீட்சை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்தும் அமுலாக்கப்படும்.

(இ) ஆயினும், நடைமுறையிலுள்ள பாடத்திட்டங்களுக்கேற்ப ஏற்கனவே பயின்று கொண்டிருப்போரது நலன் கருதி, திருத்தியமைக் கப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் கீழான பரீட்சைகளுடன், நடைமுறை யிலுள்ள பாடத்திட்டங்களின்கீழ் இரண்டு தடவைகள் பரீட்சைகள் நடாத்தப்படும்.

(ஈ) இவ்வேற்பாட்டின்படி, அல் ஆலிம் ஆரம்பப் பரீட்சையானது, 2013 ஆம் 2014 ஆம் ஆண்டுகளிலும் அல் ஆலிம் இறுதிப் பரீட்சை 2013 ஆம், 2014 ஆம், 2015 ஆம், 2016 ஆம் ஆண்டுகளிலும் நடாத்தப்படும். அதன் பின்னர் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கேற்ப மாத்திரமே அல் ஆலிம் பரீட்சைகள் நடாத்தப்படும்.

(ஐஐ) அல் ஆலிம் சான்றிதழ் பரீட்சைத் திட்டம் 2013 ஆம் ஆண்டும் அதன் பின்னரும் மேற்படி பரீட்சை இரண்டு மட்டங்களிலும் நடைபெறும் :-

(1) அல் ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ் பரீட்சை
(2) அல் ஆலிம் ஸானவிய்யா சான்றிதழ் பரீட்சை
மேற்படி இரண்டு பரீட்சைகளுக்குமான ஒழுங்குவிதிகளும்

பொதுப்பிரமாணங்களும் : 

1. மேற்படி பரீட்சைகள் கல்வி அமைச்சின் செயலாளருக்காக அவரது மதியுரைப்படி பரீட்சை ஆணையாளர் நாயகம் அவர்களால் வருடாந்தம் நடாத்தப்படும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் விதந்துரைகள் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ளப்படும்.

2. அல் ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ் பரீட்சை 2013 ஆம் ஆண்டு தொடக்கமும் அல் ஆலிம் ஸானவிய்யா சான்றிதழ் பரீட்சை 2015 ஆம் ஆண்டு தொடக்கமும் நடைபெறும்.

3. ஊடகமொழி.-

இப்பரீட்சை அறபு மொழியிலேயே நடாத்தப்படும். மொழிபெயர்ப்பு தவிர்ந்த சகல வினாக்களுக்கும் அறபு மொழியிலேயே விடையளித்தல் வேண்டும். மொழிபெயர்த்தல் வினாவுக்கு விடையளிப்பதற்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் ஒன்றை மட்டும் பரீட்சார்த்தி தெரிவுசெய்யக்கூடியதாக அமைந் திருக்கும்.

4. தகைமைகள் :

4.1 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட அறபுக் கல்லூரி ஒன்றில் மூன்றாண்டுக் கற்கையைப் ப{ர்த்திசெய்தவர், அல் ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சைக்கும், ஐந்தாண்டு கற்கையைப் ப{ர்த்திசெய்தவர் அல் ஆலிம் ஸானவிய்யா பரீட்சைக்கும், தோற்றுவதற்குத் தகுதியுடையவராவார்.

4.2 மேற்குறித்த அறபுக் கல்லூரியொன்றில் கல்வி பயிலும் ஒரு மாணவர் தகுதியுடையவர் என அதிபர் கருதுமிடத்து மேற்குறித்த இரு பரீட்சைகளுக்கும் தோற்றுவதற்குத் தகுதியுடையவராவார். இவ்விரு சாராரும் அறபுக் கல்லூரிப் பரீட்சார்த்திகளாக தோற்ற முடியும்.

4.3 அறபுக் கல்லூரிகளில் கல்வி பயின்று கொண்டிராதோர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக அண்மையிலுள்ள அறபுக் கல்லூரியொன்றின் ஊடாக பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

4.4 அல் ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சையில் சித்தியடையும் பரீட்சார்த்தி அல் ஆலிம் ஸானவிய்யா பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதியுடையவராவர்.
4.5 அல் ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சையைப் ப{ர்த்திசெய்த பின்னரே ஸானவிய்யா பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

5. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தில் இப்பரீட்சைகளுக்காக பதிவுசெய்யப்பட்ட அரபுக் கல்லூரிகளுக்கு விண்ணப்பப்பத்திரங்களும் அறிவுறுத்தல்களும் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பப்பத்திரங்களும் அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெறாத அரபுக் கல்லூரிகள் ”பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு வெளிநாட்டு பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்த, பத்தரமுல்ல”” என்ற முகவரியுடன் தொடர்புகொள்ள வேண்டும். 

5.1 விண்ணப்பங்கள் யாவும் மூன்று பிரதிகளில் தயாரிக்கப்பட்டு இரு பிரதிகளை பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்புவ தோடு மற்றைய பிரதியை விண்ணப்பம் அனுப்பும் அரபுக் கல்லூரியில் கோவைப்படுத்தி வைத்தல் வேண்டும்.

5.2 விண்ணப்பங்கள் தெளிவாகவும் பிழையின்றியும் ப{ரணப் படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு ப{ர்த்திசெய்யப்படாத விண்ணப்பங்களும், காலம் கடந்து கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

5.3 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அல்லது பத்திரிகை விளம்பரம் மூலம் விண்ணப்பம் கோரப்படும் சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்படும்.

5.4 ப{ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

பரீட்சை ஆணையாளர் நாயகம்,  ஒழுங்கமைப்பு, வெளிநாட்டு பரீட்சைகள் கிளை, தேசிய மதிப்பீட்டுக்கும் பரீட்சித்தலுக்குமான சேவை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,  பெலவத்த, பத்தரமுல்ல.

6. பரீட்சைக் கட்டணம் :

6.1 முதன் முறையாகத் தோற்றும் அறபுக் கல்லூரிப் பரீட்சார்த்திகளிடம் பரீட்சைக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது. இரண்டாம் முறையாக அல்லது அதன் பின்னர் தோற்றுவோரும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் பரீட்சைக் கட்டணம் செலுத்துதல் வேண்டும்.

6.2 கட்டணம் செலுத்தும் முறை.-

உரிய தொகையை அஞ்சல் அலுவலகத்தில் செலுத்தி பெறப்படும் பற்றுச்சீட்டை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

ழூ பரீட்சைக் கட்டணமும் அது செலுத்தப்பட வேண்டிய முறையும் காலத்துக்குக்காலம் தேவைக்கேற்ப பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும்.

7. பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பம் செய்த அறபுக் கல்லூரி அதிபர் மூலமாக விநியோகிக்கப்படும்.

7.1 ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சைக்குத் தோற்றும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனுமதி அட்டையைப் பரீட்சை மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் தனது பரீட்சார்த்தி தகைமையை இழக்க நேரிடும்.

7.2 அனுமதி அட்டையில் விண்ணப்பதாரியின் கையொப்பம் உரிய அறபுக் கல்லூரி அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டி ருத்தல் வேண்டும்.

8. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல்.- ஒவ்வொரு பரீட்சார்த்தியும் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்களுள் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும் :

(அ) தேசிய அடையாள அட்டை ;
(ஆ) செல்லுபடியாகும் பிரயாணக் கடவுச்சீட்டு.

9. பரீட்சை நிலையங்கள் நிறுவப்படும் நகரங்கள் :

  • திருகோணமலை
  • மட்டக்களப்பு
  • கல்முனை
  • அக்கரைப்பற்று
  • கொழும்பு
  • கம்பஹா
  • களுத்துறை
  • காலி
  • மாத்தறை
  • கண்டி
  • மாத்தளை
  • நுவரெலியா

மேல் குறிப்பிட்டுள்ள நகரங்களில் நிறுவப்படும் பரீட்சை நிலையங்களுக்கு போதிய விண்ணப்ப தாரிகள் விண்ணப்பிக்காதவிடத்து அவ்விண்ணப்ப தாரிகள் அண்மையிலுள்ள நகரப் பரீட்சை நிலையத் துடன் இணைத்துக்கொள்ளப்படுவர். தேவையைப் பொறுத்து இந்நகரங்களில் பரீட்சை நிலையங்களை நிறுவாமலிருக்கவும், வேறு நகரங்களில் பரீட்சை நிலயங்களை நிறுவுவதற்கும் பரீட்சை ஆணையாளர் நாயகம் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

10. விடைத்தாள் மீள் பரிசீலனை.-

பெறுபேறுகள் வெளியாகி முப்பது நாட்களுக்குள் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்படும் படிவங்கள் மூலம் நிறுவனத்தின் அதிபர் விண்ணப்பம் செய்தால் விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு அரபுக் கல்லூரி, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும். இதற்காக கட்டணம் ஒன்று அறவிடப்படும். பரீட்சை முடிவுகளில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் கட்டணம் மீளளிக்கப்படும்.

 

11. அல்-ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ்ப் பரீட்சை (2013 ஆம் ஆண்டும் அதன் பின்னரும்)

பரீட்சை பற்றிய விபரம்.-

இப்பரீட்சை பின்வரும் ஆறு பாடங் களுக்குரிய மூன்று மணித்தியாலம் கொண்ட ஆறு வினாப் பத்திரங்களைக் கொண்டதாகும். ஆறு பாடங்களும் பின்வருமாறு :

(1) அல்லுகதுல் அறபிய்யா வல் அதப்-ஐ – அறபு மொழியும் இலக்கியமும்-ஐ
(2) அல்குர்ஆனுல் கரீம் – அல்குர்ஆனுல் கரீம்
(3) அல் ஹதீஸ் நபவி – நபி மொழிகள்
(4) அல் பிக்ஹூல் இஸ்லாமி – இஸ்லாமிய சட்டநெறி
(5) அத்தர்பியா அல் இஸ்லாமிய்யா – இஸ்லாமிய ஒழுக்கவியல்
(6) அத்தாரீகுல் இஸ்லாமி – இஸ்லாமிய வரலாறு

12. பாடத்திட்டம் :

(1) அல்லுகதுல் அறபிய்யா வல் அதப் – ஐ (அறபுமொழியும் இலக்கியமும்-ஐ).- இதில் கருத்து வெளியிடும் ஆற்றல், எண்ணங்களையும் கருத்துக்களையும் ஒழுங்குபடுத்தும் முறை என்பன பரீட்சிக்கப்படும். கட்டுரை எழுதுதல் இலக்கணமும் மொழி ஆராய்ச்சியும். முன் குறிப்பிடப்படாத பகுதிகளை மொழி பெயர்த்தல் என்பனவும் பரீட்சிக்கப்படும்.

இதற்கான பாட நூல்கள் :

(அ) அல் அரபிய்யது லின்னாஷிஈன் பாகம் 1, 2, 3 – மஹ்மூத் இஸ்மாஈல் ஸீனீ, நாஸிப் முஸ்தபா அப்துல் அஸீஸ் முக்தார், தாஹிர் ஹூஸைன்

(ஆ) மஜ்மூஅதுந்தஹ்வ் – மீஸான் அஜ்னாஸ், தக்வீமுல் லிஸான், அல்அவாமில் ஆகிய பிரிவுகள்

(இ) முதம்மிமதுல் ஆஜூருமிய்யா – முஹம்மத் இப்னு முஹம்மத் அர்ரஈனி

(ஈ) அன்னஹ்வுல் வாழிஹ் அல்மர்ஹலா அல் இப்திதா இய்யா ஜூஸ்உ 1, 2, 3 – அலி ஜாஸிம், முஸ்தபா அமீன்

(2) அல்குர் ஆனுல் கரீம்.- ஜூஸ்உ அம்ம மனனம் : தஜ்வீத், மொழிபெயர்ப்பு உட்பட அல்குர்ஆன் பற்றி பொதுவான விளக்கம் பெறுதலும் கருத்துச் சுருக்கமும் தஜ்வீத் சட்ட விளக்கங்களும

இதற்கான பாட நூல்கள் :

(அ) ஹிதாயதுல் முஸ்தபீத் – அஷ்ஷெய்கு மஹ்மூதுல் மஹ்மூத்
(ஆ) தப்ஸீர் அல்ஜலாலைன் – இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸூய{த்தி
(3) அல் ஹதீஸூன் நபவி – நபி மொழிகள் :

  • ஹதீஸ் ஒரு சட்ட மூலாதாரம் என்ற வகையில் ஹதீஸ் பற்றிய பொது விளக்கம்
  • ஹதீஸ்களின் பொருள் விளக்கம்
  • குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களை மனனமிடல்
  • ஹதீஸ்களிலிருந்து சட்ட விளக்கம் பெறல் என்பன இவ்வினாப்பத்திரத்தில் பரீட்சிக்கப்படும்

இதற்கான பாட நூல்கள் :

(அ) அல் அர்பஊனன்நவவிய்யா – இமாம் நவவி
(ரஹ்) அவர்கள்
(ஆ) ஸாதுத் தாலிபீன் – மௌலானா முஹம்மத் ஆஷிக் இலாஹி
(4) அல்பிக்ஹூல் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டநெறி) :

இஸ்லாமிய சட்டக்கலை பற்றிய அறிவும் தெளிவும் ழூ காலத்துக்குக்காலம் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கான சட்டத் தீர்வுகளைப் பெறும் ஆற்றல் என்பன பரீட்சிக்கப்படும்.

இதற்கான பாட நூல்கள் :

மத்னு அபீஷூஜா‚ – அல்காழி அபீஷூஜா அஹ்மத் இப்னு ஹூஸைன் அஹ்மத் அல் இஸ்பஹானி

(5) அத்தர்பிய்யா அல் இஸ்லாமிய்யா (இஸ்லாமிய ஒழுக்க வியல்).- இஸ்லாமிய அறநெறிகளும் ஒழுக்க மாண்பு களும் நடைமுறைகளும் இவ்வினாப்பத்திரம் மூலம் பரீட்சிக்கப்படும்.

இதற்கான பாட நூல்கள் :

(அ) த‚லீமுல் முதஅல்லிம் – புர்ஹானுல் இஸ்லாம் அஸ்ஸர்னூஜி
(ஆ) ஹிஸ்னுல் முஸ்லிம் – ஸஈத் இப்னு அலி இப்னுவஹ்ப் அல்கஹ்தானி
(6) அத்தாரீகுல் இஸ்லாமி (இஸ்லாமிய வரலாறு).- ஜாஹிலியாக் காலம் பற்றிய விரிவான விளக்கம் ; முஹம்மத் (ஸல்) அவர்களது பிறப்பு முதல் வபாத் வரையான வரலாறு குலபாஉர்ராஷிதீன் குணநலன்கள், சாதனைகள், ஆட்சிமுறை, ஆட்சிப் பரம்பல்

இதற்கான பாட நூல் :

தாரீகுல் இஸ்லாமி – ஹஸன் இப்ராஹீம் ஹஸன்

13. வினாப்பத்திர அமைப்பு.- ஒவ்வொரு வினாப்பத்திரமும் v  ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். பகுதி ஐ இல் இடம்பெறும் வினாக்கள் கட்டாயமானவை. சுருக்கமாக விடையளிக்க வேண்டிய 10 வினாக்கள் இதில் இடம்பெறும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 புள்ளிகள் வீதம் 40 புள்ளிகள் வழங்கப்படும்.

பகுதி ஐஐ.- ஒரு கட்டுரை வடிவிலான வினாவினையும் ஆறு பகுதிக் கட்டமைப்பு வினாக்களையும் உள்ளடக்கியதாகும். கட்டுரை அமைப்பிலான வினாவுக்கு விடையளிப்பது கட்டாயமானதாகும்.

இதற்கு இருபது புள்ளிகள் வழங்கப்படும். பகுதிக் கட்டமைப்பு வினாக்கள் ஆறில் நான்கிற்கு மாத்திரம் விடையெழுத வேண்டும். ஒவ்வொரு வினாவும் அ, ஆ ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதிக்கும் 5 புள்ளிகள் வீதம் ஒரு வினாவுக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும்.

14. சித்தியினைத் தீர்மானிக்கும் நியதிகள்.- ஒவ்வொரு வினாப் பத்திரத்துக்குமான மொத்தப் புள்ளிகள் 100 ; சித்தியடைவதற்குரிய குறைந்த புள்ளிகள் 35 ஆகும்.

அல் ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ் பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்து க. பொ. த. (சா. த.) பரீட்சையில் மொழி, கணிதம் உட்பட குறைந்தபட்சம் ஆறு பாடங்களிலாவது தேறியோருக்கே பரீட்சைத் திணைக்களத்தினால் அல் ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ் வழங்கப்படும். ஆயினும் அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் தனித்தனி பெறுபேற்றுப் பத்திரங்களை பரீட்சைத் திணைக்களம் வழங்கும்.

15. பரீட்சை முடிவுகளை வெளியிடலும் சித்திபெற்றவர்களைத் தீர்மானித்தலும்.- அல் ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சையில் இப்பரீட்சைக்குரிய ஆறு பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர்.

ஏதாவது ஒரு பாடத்தில் மாத்திரம் சித்திபெறத் தவறியிருப்பின் அவர் நூன சித்தி பெற்றவராகக் கருதப்படுவார். அவர் அடுத்துவரும் இரு பரீட்சைத் தவணைகளுக்குள் குறித்த பாடப்பரீட்சைக்குத் தோற்றி, அப்பாடத்தில் சித்திபெறின் அவரும் அல் ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சையில் சித்திபெற்றவராகக் கருதப்படுவார்.

ஒரு பரீட்சார்த்தி முதவஸ்ஸிதா பரீட்சை சான்றிதழ் பெறுவதற்கு இப்பரீட்சையில் தேறியிருப்பதுடன் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் க. பொ. த. (சா. த.) பரீட்சைக்குத் தோற்றி மொழி, கணிதம் உட்பட குறைந்தபட்சம் ஆறு பாடங்களிலேனும் தேறியிருத்தலும் வேண்டும்.

இவ்விரு பரீட்சைகளிலும் தேறியவர்களுக்கே பரீட்சைத் திணைக்களத்தினால் அல் ஆலிம் முதவஸ்ஸிதா சான்றிதழ் வழங்கப்படும். உரியபடி பரீட்சைத் திணைக்களத்தில் விண்ணப்பம்செய்து அச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

16. அல்-ஆலிம் ஸானவிய்யா சான்றிதழ் பரீட்சை (2015 ஆம் ஆண்டும் அதன் பின்னரும்) :

பரீட்சை பற்றிய விபரம்.-

இப்பரீட்சை பின்வரும் ஆறு பாடங் களுக்குரிய மூன்று மணித்தியாலம் கொண்ட ஆறு வினாப் பத்திரங்களைக் கொண்டதாகும். ஆறு பாடங்களும் பின்வருமாறு :

(1) அல்லுகதுல் அரபிய்யா – அரபு மொழியும் இலக்கியமும்-ஐஐ வல்அதப்-2

17. பாடத்திட்டம்

(1) அல்லுகதுல் அரபிய்யா வல்அதப்-ஐஐ (அறபு மொழியும் இலக்கியமும்-ஐஐ).- எண்ணங்களையும் கருத்துக்களையும் தொகுத்து வெளியிடும் ஆற்றல் பரீட்சிக்கப்படும். அறபியிலிருந்து தமிழ்ஃ சிங்களம்ஃ ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏதாவதொன்றில் மொழிபெயர்க்கும் ஆற்றல் பரீட்சிக்கப்படும். ஐய்னுல் ஹூதா பீஷர்ஹிகத்ரிந்நதா என்ற நூலின் தரத்திலான அறபு இலக்கண அறிவும் பரீட்சிக்கப் படும். பாடநூலில் இல்லாத பகுதிகளை மொழிபெயர்த்தலும் சிங்களம்ஃ தமிழ்ஃ ஆங்கிலம் ஆகிய பிற மொழியிலிருந்து அறபுக்கு மொழி மாற்றம் செய்தலும், பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கியப் பண்புகள் பற்றியதான விடயங்களும் பரீட்சிக்கப்படும்.

இதற்கான பாட நூல்கள் :

(அ) அல் அறபிய்யது லின்னாஷிஈன் பாகம் 4, 5, 6 – மஹ்மூத் இஸ்மாஈல் ஸீனி, நாஸிர் முஸ்தபா அப்துல் அஸீஸ், முக்தார் தாஹிர் ஹூஸைன்
(ஆ) அல் கிராஅதுர் ராஷிதா பாகம் 3 (1-15 பாடங்கள்) – அபுல் ஹஸன் அலி (நத்வி)
(இ) அந்நஹ்வுல் வாழிஹ் (அல்-மர்ஹலா ஸானவிய்யா) 1, 2, 3 – அலி அல் ஜாஸிம், முஸ்தபா அமீன்
(ஈ) ஐனுல் ஹூதா பீ ஷரஹிகத்ரின்நதா, அஷ்ஷெய்க் உஸ்மான் அல்பன்னானி
(உ) அல் பலாகதுல்வாழிஹா (கிஸ்முல் பயான் வல்பதீஉ) – அலிஜாஸிம், முஸ்தபா அமீன்
(2) அல்குர்ஆன் வஉலூமுஹூ (அல்குர்ஆனும் குர்ஆனியா கலைகளும்).- குறிப்பிடப்பட்ட ஸ_றாக்களின் உள்ளடக்கம் பற்றிய விரிவான அறிவும் குர்ஆனியக் கலைகள் தொடர்பான விளக்கமும் பரீட்சிக்கப்படும்.

பாட நூல் :

(அ) ஸப்வதுத்தபாஸிர்-முஹம்மத் அலி அஸ்ஸாப{னி – அல்முல்க், அல்வாகிஆ, அந்நூர், அல்ஹூஜூராத், அல்கஹ்பு, யாஸீன் ஆகிய ஸூராக்கள்
(ஆ) அத்திப்யான் பீஉலூமில் குர்ஆன் – முஹம்மத் அலி அஸ்ஸாப{னி
(3) அல் ஹதீஸ் வஉலூமுஹூ (அல் ஹதீஸூம் ஹதீஸ் கலைகளும்).- குறிப்பிடப்பட்ட பாட நூல்களில் இடம்பெறும் ஹதீஸ்களின் உள்ளடக்கம், வாழ்வில் அவற்றை செயற் படுத்தும் முறை, அதன் பயன்கள் என்பன பரீட்சிக்கப்படும்.

மேலும் ஹதீஸ் கலை தொடர்பான கலைச்சொற்கள், அவற்றின் விளக்கம், ஹதீஸின் பாதுகாப்புக்காக முன்னோர் மேற்கொண்ட ஆய்வுகள்-பங்களிப்புகள் பற்றிய அறிவும் பரீட்சிக்கப்படும்.

இதற்கான பாட நூல்கள் :

(அ) புலூகுல் மராம் – இப்னு ஹஜர் அல் அஸ்கலானி
(அத்தியாயம் தஹாரா முதல் நிகாஹ் முடியும் வரையான பகுதி)
(ஆ) மிஷ்காதுல் மஸாபீஹ் – அல் இமாம் வலியுத்தீன் அப{ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல் கதீப் (ரஹ்) – (பின்வரும் பகுதிகள் : அல் ஈமான், அல் இ‚திஸாம் பில்கிதாபி வஸ்ஸூன்னா, அல்இல்மு, பழாஇலுல் குர்ஆன், அல் அதப், அல்பிதன், அல்மனாகிப்)

(இ) தைஸீர் முஸ்தலஹில் ஹதீஸ் – மஹ்மூத் அத்தஹ் ஹான்
(4) அல்பிக்ஹூல் இஸ்லாமி வஉஸூலுஹூ

(இஸ்லாமிய சட்ட நெறியும் அடிப்படைகளும்).- குறிப்பிடப்பட்டுள்ள பாடநூலின் அடிப்படையில் பிக்ஹூ, உஸூலுல் பிக்ஹ் சம்பந்தமான அறிவும் அதனை வாழ்வில் கையாளும் விதம் பற்றிய விளக்கமும் பரீட்சிக்கப்படும்.

இதற்கான பாட நூல்கள் :

(அ) உம்ததுஸ்ஸாலிக் வஉம்ததுன்நாஸிக் – இமாம் ஷஹாபுத்தீன் அஹ்மத் இப்னு அந்நகீப் அஷ்ஷாபிஈ
(ஆ) ஷரஹூல் வரகாத் பீ இல்மி உஸூலில் பிக்ஹி – ஜலாலுத்தீன் முஹம்மத் இப்னு அஹ்மத் அல்மஹல்லி அஷ்ஷாபிஈ
(இ) தஸ்ஹீலுல் வுஸூல் இலாபஹ்மி இல்மில்உஸூல்
(5) அல்ஹழாரதுல் இஸ்லாமிய்யா (இஸ்லாமிய நாகரிகம்).- குறிப்பிடப்பட்ட பாடநூல்களின் அடிப்படையில் உமைய்யாக் காலம் முதல் உஸ்மானிய கிலாபத்தின் வீழ்ச்சி வரையான இஸ்லாமிய வரலாறு பற்றியும் இஸ்லாமிய நாகரீக வளர்ச்சி பற்றியும் பரீட்சிக்கப்படும்.

பாட நூல் :
அத்தாரீகுல் இஸ்லாமி – இப்ராஹிம் பின் மஹ்மூத் அப்துர்ராழீ
(6) அல் அகீததுல் இஸ்லாமிய்யா (இஸ்லாமியக் கோட்பாடு கள்).- குறிப்பிட்ட பாட நூல்களின் அடிப்படையில் இஸ்லாமிய அகீதா பற்றிய அறிவு, விளக்கம், வாழ்க்கையில் அதன் பிரயோகம் என்பன பரீட்சிக்கப்படும்.

பாட நூல் :

ஜவ்ஹரதுத்தவ்ஹீத் – அல் இமாம் இப்ராஹீம் அல்லிகாஇ அல்லது அகீததுத் தஹாவிய்யா – அல் இமாம் அப{ஜஉபர் அஹ்மத் இப்னு ஸலாமா அத்தஹாவி
18. வினாப்பத்திர அமைப்பு.- ஒவ்வொரு வினாப்பத்திரமும் பகுதி ஐஇ பகுதி ஐஐ என இரண்டு பகுதிகளைக் கொண்டதாக அமையும்.

பகுதி ஐ இல் உள்ள சகல வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். சுருக்கமாக விடையளிக்கவேண்டிய பத்து வினாக்களை உள்ளடக்கிய இப்பகுதியில் ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு புள்ளிகள் வீதம் 10 வினாக்களுக்கும் மொத்தம் 40 புள்ளிகள் வழங்கப்படும்.

பகுதி ஐஐ இல் ஒரு கட்டுரை வடிவிலான வினாவையும் மற்றும் ஆறு பகுதிக் கட்டமைப்பு வினாக்களையும் உள்ளடக்கியதாகும். கட்டுரை அமைப்பிலான வினாவுக்கு விடையளிப்பது கட்டாயமானதாகும். இதற்கு இருபது புள்ளிகள் வழங்கப்படும். பகுதிக் கட்டமைப்பு வினாக்கள் ஆறில் நான்கிற்கு மாத்திரம் விடையெழுத வேண்டும். ஒவ்வொரு வினாவும் அ, ஆ ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதிக்கும் 5 புள்ளிகள் வீதம் ஒரு வினாவுக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும்.

19. சித்திபெறுவதைத் தீர்மானிக்கும் நியதிகள்.-

ஒவ்வொரு வினாப்பத்திரத்துக்குமான மொத்தப் புள்ளிகள் 100 ; சித்தியடைவதற்குரிய குறைந்த புள்ளி 40. இப்பரீட்சையின் ஆறு பாடங்களிலும் சித்திபெற்ற ஒருவர் பரீட்சையில் சித்திபெற்றவராவார். ஐந்து பாடங்களில் சித்தியடைந்து ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடையத் தவறுபவர் நூன சித்தி பெற்றவராகக் கருதப்படுவர்.

அடுத்துவரும் இரு பரீட்சை தவணைகளுக்குள் நூன சித்தி பாடத்துக்குத் தோற்றிச் சித்திபெறுவதன் மூலம் இப்பரீட்சையில் தேறியவராகலாம். தரம் வழங்குதல் கீழ்வருமாறு அமையும் :

சான்றிதழ்.-

அல் ஆலிம் ஸானவிய்யா சான்றிதழ் பரீட்சையில் சித்தியடைவதுடன் பொது ஆங்கிலம், பொதுச் சாதாரண பரீட்சை தவிர்ந்த எவையேனும் மூன்று பாடங்களில் சித்தியுடன் க. பொ. த. (உயர்தர) பரீட்சையிலும்

சித்தியடைந்தவர்களுக்கே அல் ஆலிம் ஸானவிய்யா சான்றிதழ் வழங்கப்படும். உரியபடி விண்ணப்பஞ் செய்து இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

ஆயினும் அல் ஆலிம் ஸானவிய்யா பரீட்சையில் தோற்றியோருக்குத் தனித்தனியாகப் பரீட்சை பெறுபேற்றுப் பத்திரம் பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்படும்.

க. பொ. த. (உ. த.) பரீட்சை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும். அதன் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக அதற்கு தோற்றுதல் வேண்டும்.

பரீட்சை முடிவுகளை வெளியிடலும், சித்திபெற்றவர்களை தீர்மானித்தலும்.- அல் ஆலிம் ஸானவிய்யா பரீட்சையில் ஆறு பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்த வர்களாகக் கருதப்படுவர்.

ஏதாவது ஒரு பாடத்தில் மாத்திரம் சித்திபெறத் தவறியவர், அவர் நூன சித்தி பெற்றவராகக் கருதப்படுவார். அவர் அடுத்துவரும் இரு பரீட்சைத் தவணைகளுக்குள் குறித்த பாடப் பரீட்சைக்குத் தோற்றி அப்பாடத்தில் சித்திபெறின் அவரும் அல் ஆலிம் ஸானவிய்யா பரீட்சையில் சித்திபெற்றவராகக் கருதப்படுவர்.

20. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப் பட்டுள்ள இப்பரீட்சைத் திட்டத்தில் மொழிகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படின் தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளவையே சரியானவையெனக் கருதுதல் வேண்டும்.

21. இப்பரீட்சைகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்படாத யாதேனும் விடயம் பற்றி பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் முடிவே இறுதியானது.
அநுர எதிரிசிங்க, பரீட்சை ஆணையாளர் நாயகம்.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
பெலவத்தை,
பத்தரமுல்லை,

Leave A Reply

Your email address will not be published.