Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

ஆரம்பதர வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பல் சத்திரசிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்களுக்குமான திணைக்களப் பரீட்சை

3

ஆரம்பதர வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பல்
சத்திரசிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்களுக்குமான
திணைக்களப் பரீட்சை – 2012, மாச்சு

1991.05.17 ஆந் திகதியும் 662 / 11 ஆம் இலக்கமும் கொண்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார சேவையின் வைத்திய உத்தியோகத்தர்கள் தொடர்பான நியதிச் சட்டக்கோவையின் 07 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் ஆரம்ப தர வைத்திய உத்தியோகத்தர்கள் 2 ஆம் தரத்திற்கு உயர்த்தப்படுவதற்கு முன்பும், பல் சத்திர சிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்கள் தமது சேவையில் உறுதிப்படுத்துவதற்கு முன்பும் தேர்ச்சியடைய வேண்டிய திணைக்களப் பரீட்சை 2012.03.25 ஆந் திகதி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடாத்தப்படும்

என்பதை இத்தால் அறிவிக்கப் படுகின்றது. பரீட்சை நடாத்தப்படும் இடமும் கால அட்டவணையும் பிரவேசப்பத்திரத்துடன் அனுப்பிவைக்கப்படும்.
2. தகைமைகள்.- இதுவரை இப்பரீட்சையைப் ப{ரணப்படுத்தாத ஆரம்ப தரத்தின் வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பல் சத்திரசிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் மட்டும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.

3. விண்ணப்பங்கள்.-

இச்சுற்று நிரூபத்தில் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை போன்று விண்ணப்பதாரிகளினால் தயாரித்துக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் நிறுவனத் தலைவரின் மூலம் ”சுகாதார அமைச்சு, கொழும்பு 10, இலக்கம் 385, வண. பத்தேகம விமலவங்ச தேரர் மாவத்தை, ‘சுவசிரிபாய கட்டிடம்”, பணிப்பாளர் (பரீட்சை)”” அவர்களுக்கு 2012.03.05 ஆந் திகதி அல்லது அத்தினத்திற்கு முன்பு கிடைக்கக்கூடியதாக பதிவுத்தபாலின் மூலம் அனுப்ப வேண்டும்.

தனது விண்ணப்பத்துடன் முகவரி எழுதப்பட்ட ரூபா 30.00 பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட 9” Š 4” அளவுள்ள கடித உறையொன்றும் அனுப்ப வேண்டும். (இதில் விரும்பிய வகையில் அலுவலக முகவரி அல்லது சொந்த முகவரியை எழுதலாம்).

கவனிக்கவும்.-

மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய விண்ணப்பம் ஏ4 தாளின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து தயாரிக்கப்பட வேண்டும். முதற்பக்கத்தில் இலக்கம் 1-4 (இ) தொடக்கமும் இரண்டாம் பக்கத்தில் 4(ஈ)-07 தொடக்கமும் அமையும் வண்ணம் விண்ணப்பம் தயாரிக்கப்படல் வேண்டும்.

மேற்படி தகவல்களுக்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

4. பரீட்சைக் கட்டணம்.-

(i) முதன் முறையாகப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்கள், பரீட்சைக் கட்டணத்தினின்றும் விதிவிலக்கப்படுவர். ஏனைய விண்ணப்பதாரர்கள் ஒரு விடயத்திற்கு ரூபா 25 வீதம் மதிப்பிழக்கப்படாத முத்திரைகளை விண்ணப்பத்தில் ஒட்டி அதன் மேல் தனது கையொப்பத்தையும் திகதியையும் இட்டு அதை செல்லுபடி நீக்கம் புரியப்படுதல் வேண்டும்.

(ii) எக்காரணத்தைக் கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பரீட்சைக் கட்டணம் வேறு பரீட்சையொன்றின் பொருட்டு மாற்றவோ அல்லது மீளச் செலுத்தப்படுதலோ புரியப்படமாட்டாது.

5. பரீட்சைக்கு உட்படுத்திக்கொள்தல்.-

(i) ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். அவ் அனுமதிப்பத்திரங்களை உரிய முறையில் நிரப்பி பரீட்சை நிலைய அதிபருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அனுமதி அட்டைகள் சமர்ப்பிக்கப் படாத எந்த ஒரு பரீட்சார்த்தியும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்.

(ii) விண்ணப்பதாரர்களினால் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சை நிலைய அதிபருக்குத் தனது ஆளடையாளத்தை நிரூபித்தல் வேண்டும். அதன் பொருட்டு கீழே குறிப்பிடப்படும் ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்:-

(அ) தேசிய அடையாள அட்டை ;
(ஆ) திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ; (இ) சாரதி அனுமதிப்பத்திரம் ;
(ஈ) கடவுச்சீட்டு
(iii) தவிர்க்க முடியாத காரணத்தினால் பரீட்சை அனுமதிப்பத்திரம்

கிடைக்கப்பெறாதவிடத்து சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் தங்களினது பரீட்சைச் சுட்டெண், பரீட்சை நிலையம் என்பவற்றினை பெற்றுக்கொண்டு தங்களது கையொப்பத்தினை உறுதிப்படுத்திய திணைக்களத் தலைவரின் கடிதத்துடன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில், இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுட்டெண்ணில் தாங்கள் பரீட்சையினை மேற்கொள்ள முடியும். (சுகாதார அமைச்சின் இணையத்தள முகவரி :

6. பரீட்சைத் திட்டம்.-

இப்பரீட்சை மூன்று எழுத்து மூல வினாப் பத்திரங்களையும் சிங்களம்ஃ தமிழ் வாய்மொழிப் பரீட்சையொன்றையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் 100 புள்ளிகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ச்சியடைவதன் பொருட்டு ஒரு விடயத்திற்கு குறைந்தபட்சம் 50 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அமர்வில் அல்லது பல அமர்வுகளில் பிரிவுகளுக்குத் தோற்றி பரீட்சையைப் ப{ரணப்படுத்திக்கொள்ளலாம்.

சிங்களம் / தமிழ் வாய்மொழிப் பரீட்சை.- சிங்களம்ஃ தமிழ் ஆற்றலை அளப்பதன் பொருட்டு திணைக்களத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களினால் கொழும்பில் நடாத்தப்படும் வாய்மொழிப் பரீட்சையாகும். மொத்தப் புள்ளிகள் 100.

தனது நாளாந்த கடமைகளில் ஈடுபடும் பொழுது மேலோங்கும் நிகழ்வுகளின் பொருட்டு சிங்களத்தில் அல்லது தமிழ் மொழியில் கலந்துரையாடுவதற்கு உத்தியோகத்தருக்கு உள்ள ஆற்றலைப் பரீட்சித்தல்.

8. தயவுசெய்து இச்சுற்றுநிரூபத்தை உங்கள் பிரிவில்ஃ விசேட இயக்கத்தில்ஃ நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர் களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும். இத்தகவல்கள் றறற.hநயடவா.பழஎ.டம எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

Leave A Reply

Your email address will not be published.