Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

இலங்கை நிரந்தர வான்படை

2

இலங்கை நிரந்தர வான்படை

பயிலிளவல் ஆண் / பெண் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்
இலங்கை நிரந்தர வான்படையில் கீழ்வரும் பிரிவுகளில் பயிலிளவல் ஆண்/ பெண் அலுவலர்களுக்கான பதவி வெற்றிடங்கள் உள்ளன.

(அ) பொதுக்கடமை விமான ஓட்டுனர் பிரிவு (ஆண்)
(ஆ) தொழினுட்ப பொறியியல் (ஆண்/ பெண்)
(இ) இலத்திரனியல் பொறியியல் (ஆண்/ பெண்)
(ஈ) உபகரணப் பிரிவு (ஆண்/ பெண்)
(உ) நிருவாக பிரிவு (ஆண்/ பெண்)
(ஊ) நிருவாக ரெஜிமன்ட் பிரிவு (ஆண்/ பெண்)
(எ) வான் வழி நடத்துனர் பிரிவு (ஆண்)

2. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளையுடைய ஆண்/ பெண் இருபாலாரிடமும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன :-
(அ) டீளுஉ. (யுஎயைவழைn ளுவரனநைள) பட்டப் பயிற்சிக்கு உட்செல்வ தற்கான தகைமை (ஜெனரல் சேர். ஜோன் கொத்தலாவலை பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட)
பொதுக்கடமை விமான ஓட்டுனர்/ உபகரண/ நிருவாகஃ நிருவாக ரெஜிமன்ட்ஃ வான் வழி நடத்துனர் பிரிவுகள் :

குறைந்தபட்சம் க. பொ. த. (சா.த.) பரீட்சையில் ஒரே அமர்வில் 4 திறமைச்சித்தி உட்பட (மேலதிக, கட்டாயமற்ற பாடங்கள் அல்லாத) 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலத்தில் திறமைச்சித்தியும் சிங்களம்/ தமிழில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும். க. பொ. த. (உ/ த) பரீட்சையில் ஒரே அமர்வில் பௌதீக/ உயிரியல்/ வர்த்தகப் பிரிவில் (தேவையைப் பொருத்து) மூன்று பாடங்கள் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

(ஆ) தொழினுட்ப பொறியியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பிரிவுகள் :
குறைந்த பட்சம் க. பொ. த. (சா.த) பரீட்சையில் ஒரே அமர்வில் 4 திறமைச்சித்தி உட்பட (மேலதிக கட்டாயமற்ற பாடங்கள் அல்லாத) 6 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலத்தில் திறமைச் சித்தியும் சிங்களம்/ தமிழில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும். க. பொ. த. (உ.த) பரீட்சையில் ஒரே அமர்வில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்கள் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

3. வேறு தகைமைகள்.- இவற்றுக்கு மேலதிகமாக விண்ணப்ப தாரிகள் இலங்கை நிரந்தர வான்படையில் இணைவதற்கு பின்வரும் பொது நிபந்தனைகளை கட்டாயமாக ப{ர்த்திசெய்தல் வேண்டும் :-

(அ) தேசிய இனம் :-

ஓர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ஆ) வயது :- 2012, மே 01 ஆந் திகதியன்று 18 வயதிற்கு குறையாமலும் 22 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

(இ) உயரம் :-

ஆண்- 5 அடி 6 அங்குலத்திற்கு குறையாதிருத்தல் வேண்டும் ; பெண்-5 அடி 4 அங்குலத்திற்கு குறையாதிருத்தல் வேண்டும்.

(உ) மார்பு :-

ஆண் 32″ (குறைந்தது)
(ஊ) பார்வை வர்ணப்பதிவு மட்டம் :- ஊP2

(எ) தொலை பார்வை :-

இரண்டு கண்களிலும் 6/ 6 (மூக்குக் கண்ணாடி பயன்படுத்தப்படாமல்) 

(ஏ) குடியியல் நிலை :-

தேர்வு நாடிகள் திருமணமாகாதவர்களாக இருத்தல் வேண்டும். பயிலிளவல் எவரும் பயிற்சியின்போதும் ஆணைபெற்ற திகதியிலிருந்து ஓராண்டு காலத்துக்கும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். 

4. விளையாட்டுத்துறையில் ஈட்டியுள்ள சாதனைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

5. இரண்டாம் மூன்றாம் பந்தியின் தேவைப்பாட்டைப் ப{ர்த்தி செய்யாத தேர்வுநாடிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்தவுடன் உயரம், நிறை, பார்வை மட்டம் என்பன பரிசீலிக்கப்படும். வர்த்தமானியில் குறித்துரைக்கப்பட்ட உயரம், நிறை, பார்வை மட்டம் ஆகியவற்றிற்கு குறைவானவர்களும் உடற்தகைமை மட்டத்தை கொண்டிராதவர்களும் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.

தேவையான உயரம் இல்லாதிருந்தாலும் வான்படைக்கு ஒருவரின் தேவை அல்லது சேவை நன்மை பயக்கும் என வான்படை தளபதியால் ஏற்றுக்கொள்ளப்படும் இடத்தில் அவரின் விண்ணப்பம் விசேட தகைமைகளைக் கொண்டிருப்பின் அது கவனத்தில் கொள்ளப்படும்.

6. சேவை நிபந்தனைகள்.- (அ) தேர்வுநாடி தொடக்கத்தில் ஏனைய பதவி வரிசைகளுக்குப் போன்ற அதே விதத்தில் வான்படையில் ஒரு பயிலிளவலாகச் சேர்க்கப்பட்டு அடிப்படை யுத்தப் பயிற்சியொன்றை மேற்கொள்வர்.

அடிப்படை பயிற்சி திருப்திகரமாக முடிவடைந்ததும் மற்றைய பயிற்சிக்கான காலப்பகுதி பயிலிளவல் சேவையின் கிளையைப் பொருத்து இருக்கும். பின் ஏனைய பதவி வரிசையிலான ஆட்சேர்ப்பு நீக்கப்பட்டு பைலட் ஒபிசர் பதவி வரிசையில் நிரந்தர ஆணையொன்றை பெறுவர். 

(ஆ) பயிலிளவல் பாதுகாப்பு அமைச்சின் கலந்தாலோசனையுடன் வான் படை ஏவுநரினால் தீர்மானிக்கப்பட்டவாறான இலங்கையினுள் அல்லது வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்குத் தேவைப்படுத்தப் படுவர்.
(இ) பயிலிளவல்களாகப் பயிற்சி பெறும் காலப்பகுதியின்போதும் அதன் பின்னரும் ஆளணியினர் வான்படைச் சட்டத்திற்கு ஆளாவர்.
(ஈ) ஒவ்வொரு பயிலிளவலுக்கும் அனைத்து வகை சீருடைகள், உபகரணங்கள், மருத்துவ வசதிகள் என்பனவும் அளிக்கப்படும்.

(உ) பயிலிளவலின் பயிற்சிக் காலத்தின்போது பயிலிளவலுக்கு வான்படை உணவு விடுதியொன்றில் இடவசதியளிக்கப்பட்டு உணவும் வழங்கப்படும்.
(ஊ) ஒரு பயிலிளவல் பயிற்சியின்போது ஆணையொன்றைப் பெறுவதற்கான தேர்வை நாடும் நிலையில் இருந்து தாமாகவே விலகிக்கொள்ளுமிடத்து அத்தகைய பயிலிளவலின் பொருட்டு அதுகாலவரையில் இலங்கைக் குடியரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செலவுகள் யாவும் இலங்கைக் குடியரசிற்கு மீளளிக்கும்படி அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தேவைப்படுத்தப்படுவர்.

(எ) ஒரு பயிலிளவல் தமது பயிற்சியின்போது எச்சமயத்திலும் பிறழ்நடத்தை காரணமாக அல்லது அவரது கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஏதுக்களுக்காக ஆணை பெறுவதற்கான தகைமைக்குப் பொருத்தமற்றவ ரென அதிகாரிகளினால் அறிக்கை இடப்படுமிடத்து அவர் பயிற்சியில் இலங்கைக் குடியரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாச் செலவுகளை யும் இலங்கைக் குடியரசிற்கு மீளளிக்கும்படி அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தேவைப்படுத்தப்படுவரென்பதுடன் இதற்காக இலங்கை அரசின் சார்பில் வான்படை ஏவுநருடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்யும்படியும் தேவைப்படுத்தப்படுவர்.

(ஏ) பெற்றோர் அல்லது பாதுகாவலர் உட்பந்திகள் ஊ, எ தொடர்பாக விண்ணப்பப்படிவத்தின் 27 ஆம் சுட்டில் தரப்பட்டுள்ளதைப் போன்ற வெளிப்படுத்துகையொன்றில் கையொப்பமிட்டு அவற்றை விண்ணப் பத்துடன் சேர்த்து அனுப்பிவைத்தல் வேண்டும். இத்தேர்வுநாடிகள் பயிலிளவல்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்தப் படிவத்தில் பின்தொடரும் ஒரு ஒப்பந்தத்தை இலங்கைக் குடியரசுடன் செய்து கொள்ளும்படி தேவைப்படுத்தப்படுவர்.

(ஐ) பந்தி 02 இலும் 03 இலும் உள்ள தேவைகளைக் கொண்டிருக்கும் தேர்வுநாடிகள் முதலாவது நேர்முகப்பரீட்சைக்குச் சமூகமளிக்க வேண்டுவதுடன் இதில் சித்தி பெறுபவர்கள் அலுவலர் தரப் பரீட்சைக்கும் அழைக்கப்படுவர். அலுவலர் தரப்பரீட்சையில் சித்தி பெறும் தேர்வுநாடிகள் மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப் படுவதுடன். (எல்லா விண்ணப்பதாரிகளும் இலங்கை வான்படை யினால் ஒழுங்கு செய்யப்பட்ட மருத்துவச் சபைக்கு உட்படுத்தப்படுவர்.) தேவைப்படின் விமானத்தில் செல்லும் திறமையும் பரீட்சிக்கப்படும். ஒவ்வொரு கிளைகளுக்கும் தேவைப்படும் தேர்வுநாடிகளின் எண்ணிக்கை அவரவர்கள் இந்த நேர்முகப் பரீட்சைகளிலும் தேர்வுகளிலும் காண்பித்த திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

(ஒ) திருமணமாகாத அலுவலர் ஒருவர் உணவு விடுதியில் வசிப்பதற்கு தேவைப்படுத்தப்படுவர். அவருக்கு தளபாடங்களுடனான இடவசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்படும். சேவையாளர் சேவைக்கும் ஏற்பாடு செய்யப்படும். திருமணமாகாத அலுவலர்களின் உணவுப்படியும் சேவையாளர் படியும் உணவு விடுதிக்குச் செலுத்தப்படும்.
(ஓ) திருமணமாகிய அலுவலராயின் (கிடைக்குமாயின்) மணமானோர் குடிமனை வழங்கப்படும். பகிரங்க சேவையாளருக்கு ஏற்புடைத்தாவது போன்று வாடகை அறவிடப்படும்.

(ஒள) எல்லா அலுவலருக்கும் உலகின் எப்பாகத்திற்கும் எந்நேரத்திலும் கடமைக்காக அல்லது பயிற்சிக்காக அனுப்பப்படுவதற்கு ஆளாவர்.
(அஅ) எல்லா அலுவலருக்கும் வான் படைச் சட்டத்தினாலும் காலத்திற்கு காலம் வழங்கப்படும் கட்டளையினாலும் ஆளப்படுவர்.

7. அரசகரும மொழித் தேவைப்பாடுகள் :- தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு நாடிகள் இலங்கைக் குடியரசின் மொழிக் கொள்கைக்கு உடன்பட்டவர்களாகவும் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரசகரும மொழிச்சட்டத்தின் ஏற்பாடுகளைச் செயற்படுத்துவற்காகவும் ஏற்கனவே ஆக்கப்பெற்ற அல்லது இதன்பின்னர் ஆக்கப்பெறும் எவ்விதிகளுக்கும் இணங்கி ஒழுகுமாறு தேவைப்படுத்தப்படுவர்.

8. சம்பளமும் கொடுப்பனவுகளும்.- (அ) இலங்கை வான் படையில் பயிலுனர்களுக்கும் ஆணைபெற்ற அலுவலர்களுக்கு மான சம்பளம் பின்வருமாறு (ஆண்டொன்றுக்கு) –

பயிலிளவல் : ரூபா 1,80,240

பைலட் ஆபீசர் : ரூபா 2,29,200

பிளையிங் ஆபீசர் : ரூபா 2,75,220 – 34 ஒ 7,740 – ரூபா 5,38,380

ப்ளையிட் லெப்டினன்ட் : ரூபா 3,21,660 – 28 ஒ 7,740 – ரூபா 5,38,380

ஸ்குவாட்ரன் லீடர் : ரூபா 3,52,620 – 24 ஒ 7,740 – ரூபா 5,38,380

விங் கமாண்டர் : ரூபா 3,62,100 – 20 ஒ 9,480 – ரூபா 5,51,700

குறூப் கப்ரின்; : ரூபா 4,41,060 – 18 ஒ 12,600 – ரூபா 6,67,860

(ஆ) ஏனைய கொடுப்பனவுகள்.-

(1) வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ரூபா 5,850.

(2) உற்சாகமூட்டும் கொடுப்பனவு ஐந்து வருடங்களின் பின்பு ஒவ்வொரு மாதமும் ரூபா 250 வீதம் வழங்கப்படும்.

(3) கடினப்படி :

மாதமொன்றுக்கு ரூபா 600.

(4) விசேட கொடுப்பனவு : யுத்தப் பிரதேசங்களில் பணிபுரிபவர் களுக்கு மாதமொன்றுக்கு ரூபா 5,000 (மாதமொன்றுக்கு).

(5) விசேட கொடுப்பனவு ரூபா 3,000 (ஒவ்வொரு வேலை நாட்களுக்கும் ரூபா 100 வீதம் கொடுப்பனவு வழங்கப்படும்.)

(6) இடைக்காலக் கொடுப்பனவு மாதமொன்றுக்கு ரூபா 1,000. (7) சீருடை பேணுதல் படி (மாதமொன்றுக்கு ரூபா 255).

(8) சேவையாளர் படி : மாதமொன்றுக்கு ரூபா 637.50 (வெளியிலிருந்து வசிக்க அனுமதி பெற்றிருந்தால்)

(9) உணவுப்படி மாதமொன்றுக்கு ரூபா 11,464.50 (வெளியி லிருந்து வசிக்க அனுமதி பெற்றிருந்தால்)

(10) ஏற்புடைத்தாகுமிடத்து தகைமைப்படி (மாதமொன்றுக்கு ஆகக்கூடியது ரூபா 637.50 வரை).

(11) ஆண்டொன்றுக்கு மூன்று சோடி விடுமுறை புகையிரதப் பிரயாணப்பத்திரம் (அலுவலருக்கும் துணைவிக்கும் பிள்ளைகளுக்கும்)

(12) உணவு விடுதிகளில் வசிக்கும் அலுவலருக்கு மாதமொரு தடவை

விடுதியிலிருந்து சொந்த இருப்பிடம் போய்வருவதற்கு மேலதிகமாக ஒரு சோடி புகையிரதப் பிரயாணப்பத்திரம் அல்லது பஸ் வண்டிக் கட்டணம் செலவின் மீளளிப்பு.

(13) இலவச சீருடையும் பிற சார்பான பொருட்களும்.
(14) இலவச மருத்துவ வசதிகள் (ஏற்புடையதாயின் குடும்பத்தின ருக்கும்).

(15) திருமணமான அலுவலருக்கு மாத்திரம் தொழில் புரியும் இடத்திலிருந்து 30 மைல்களுக்கு உட்பட்டதான இடத்திற்குப் பயணம் செய்வதற்கு இ. போ. ச. இலவசப் பயணச்சீட்டு வசதிகள் வழங்கப்படும்.

(16) பொதுக்கடமை விமான ஓட்டுனர் கிளையில் உள்ளவர் களுக்கு பறத்தல் சம்பளம் வழங்கப்படும்.

(17) அரசாங்க குடிமனைகளில் இருப்பாட்சி செய்யாத திருமண மான அலுவலர்களுக்குப் பைலற் ஆபீசர் இல் இருந்து குறுப் கப்ரன் அதற்கு மேலும் மாதமொன்றுக்கு ரூபா 1,600 இலிருந்து ரூபா 4,250 வரை வாடகைப்படிகள் கொடுபடற் பாலனவாகும்.

9. ஓய்வ{தியங்கள்ஃ பணிக்கொடைகள்.- காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1981 இன் வான்படை ஓய்வ{திய அத்துடன் பணிக்கொடைகள் கோவையின் நியதிகளின்படி கொடுபடற்பாலன வாகும். எல்லா அலுவலர்களும் விதவைகள், அநாதைகள் (ஆயுதந் தாங்கிய படைகள்) ஓய்வ{திய தி;ட்டத்திற்கு உதவுதொகை செலுத்துப வராவர். உதவுதொகை 1970 ஆம் ஆண்டின் விதவை, அநாதைகள் (ஆயுதங் தாங்கிய படைகள்) ஓய்வ{தியத் திட்டத்தில் உள்ளபடியனவாகும்.

10. விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்.- (அ) விண்ணப் பங்கள் கீழே கொடுக்கப்பட்ட படிவத்தின் நியதிகளின்படி சமர்ப்பிக்கப் பட வேண்டும். எல்லாக் கூடுகளும் கூடியவரை விரிவான விவரங் களுடன் தெளிவாக தமது கையெழுத்தால் நிரப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் 2012, சனவரி 31 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன் “பிரதான ஆட்சேர்ப்பு அதிகாரி, இலங்கை விமானப்படை, ஏக்கல, கொட்டுகொட” என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். (பதிவுத்தபாலில் அனுப்பாத விண்ணப் பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா). விண்ணப்பம் அனுப்பப்படும் கடித உறையில் இடதுபக்க மேல் மூலையில் “பயிலிளவல் ஆண்ஃ பெண் அலுவலர்களுக்கான விண்ணப்பம் – ……………………….. பிரிவு” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

 

முடிவுத் தேதியின் பின்னர் கொட்டுகொட, ஏக்கல, இலங்கை வான்படையை வந்தடைவனவும் இந்த அறிவித்தலின் தேவைப்பாடுகளுக்கு அமையாதவையுமான விண்ணப்பங்கள் கவனிக்கப்படமாட்டா.

(ஆ) அரசாங்க சேவையில்ஃ கூட்டுத்தாபனத்தில்ஃ சபையில்ஃ குடியியல் தாபனத்தில் உள்ள விண்ணப்பக்காரர்களது விண்ணப்பம் தத்தம் திணைக்களத்தின்ஃ சபையின்ஃ குடியியல் தாபனத்தின் தலைமை யதிகாரிகள் ஊடாகவே அனுப்புதல் வேண்டும். இந்த விண்ணப்பங்கள், விண்ணப்பக்காரர் தெரிவுசெய்யப்படின் விடுவிக்கப்படுவர் என்ற சான்றிதழொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(இ) தேர்வுநாடி நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படும்போது அல்லது அவ்வாறு செய்யும்படி தேவைப்படுத்தப்படும் போது பின்வருவன வற்றின் மூலப்பிரதிகளை காண்பிக்குமாறு தேவைப்படுத்தப்படுவர் :-

(1) பிறப்புப்பதிவு சான்றிதழ் (கல்விச் சட்டக்கோவையின் நோக்கத்திற்காக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா).
(2) விண்ணப்பித்த கிளைக்குத் தேவையான கல்வித் தகைமைகளை ஆதாரப்படுத்தும் சான்றிதழ்.

(3) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தொழில்ஃ தொழில்நுட்பப்பயிற்சி அத்துடன்ஃ அல்லது அனுபவச் சான்றிதழ் (எவையேனுமிருப்பின்).

(4) இரு குணநலச் சான்றிதழ்கள். இதில் ஒன்று விண்ணப்பதாரர் கடைசியாகக் கல்வி கற்ற பாடசாலை அதிபரினதாகவும் மற்றையது இரண்டு வருடங்களுக்கு மேலாக விண்ணப்பக் காரரை அறிந்துள்ளவரான பொறுப்புவாய்ந்த ஒருவரினதாக அல்லது தொழில் செய்பவராயின் அப்போதைய தொழில் தருநரினதாக இருத்தல் வேண்டும்.

(5) விளiயாட்டுத்துறைகள், பயிலிளவல் பயிற்சி முதலியவற்றை ஆதாரப்படுத்தும் சான்றிதழ்கள்.

(ஈ) ஆவணங்களைக் காண்பிக்கும்படி வேண்டப்படும்போது அவற்றைக் காண்பிக்கத் தவறியவர்களான தேர்வுநாடிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கெடுக்கப்படமாட்டா.
(உ) ஆவணங்களோ ஆவணங்களின் பிரதிகளோ விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்படுதலாகாது.

(ஊ) விண்ணப்பப்படிவத்துடன் சேர்த்து சான்றிதழ்களின் எவையேனும் மூலப்பிரதிகள் அனுப்பப்படின் அவை காணாமற் போனமைக்கு வான்படை பொறுப்பல்ல.

11. விண்ணப்பத்தில் பிழையான தகவல் காணப்படும் ஏதேனும் கூற்று அத்தகைய பிழை தெரிவுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்படின் தகைமையிழப்பிற்கும் தெரிவுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்படின் பதவிநீக்கத்திற்கும் விண்ணப்பகாரரை ஆளாக்கிவிடும்.

12. தேர்ந்தெடுத்தல், நேர்முகப்பரீட்சை முதலியன.- (அ) மேற்கூறப்பட்டுள்ள நிபந்தனைகளைப் ப{ர்த்தி செய்யும் தேர்வுநாடிகளிலிருந்து ப{ர்வாங்கத் தெரிவுகள் செய்யப்படும். ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுநாடிகள் வான்படை ஏவுநரினால் விதித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்படி தேவைப்படுத்தப்படுவார்கள். இதன் பின்னர் தெரிவுச் சபை ஒன்றினாலான நேர்முகப் பரீட்சையின் பின்னர் இறுதித் தெரிவு நடைபெறும்.

(ஆ) நேர்முகப் பரீட்சைகளுக்குத் தெரிவுசெய்யப்படும் தேர்வுநாடி களுக்கு அத்தகைய நேர்முகப் பரீட்சைக்கான இடம், நேரம், திகதி என்பன எழுத்து மூலம் அறிவிக்கப்படும். இது சம்பந்தமாகப் பயண அல்லது பிற செலவுகள் வழங்கப்படமாட்டா.
(இ) விண்ணப்பக்காரர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

(ஈ) இறுதி நேர்முகப் பர்P ட்சைகளைத் தொடர்ந்து பொருத்த மாகக்கூடியவரான தேர்வுநாடிகள் வான்படை மருத்துவச் சபைக்கு சமுகமளிக்கும்படி தேவைப்படுத்தப்படுவர்.

(உ) ஒரு தேர்வுநாடியைச் சிபாரிசு செய்ய விரும்புவதாயின் அவருக்கு ஒரு நற்சான்றிதழைக் கொடுப்பதன் மூலம் அங்ஙனம் செய்யலாம். தேர்வுநாடி ஒருவரின் தெரிவில் எந்தவிதமான ஆதரவையும் தேடுதல் அல்லது செல்வாக்கைப் பிரயோகிக்க முயற்சித்தல் அத்தகைய விண்ணப்பக்காரரை தகுதியிழக்கச் செய்யும்.

(ஊ) சேர்த்துக்கொள்வதற்குப் பொருத்தமற்றவராகக் காணப்படும் தேர்வுநாடிகளுக்கு அதுபற்றி அறிவிக்கப்படமாட்டா.

Leave A Reply

Your email address will not be published.