Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்

2

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்
சாரதி ஆலோசகர்களைப் பதிவு செய்வதற்கான எழுத்து மூலப்
பரீட்சை – 2020

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி ஆலோசகர்களைப் பதிவு செய்வதற்கான எழுத்துமூலப் பரீட்சைக்குத் தகுதியுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து 2012.02.14 ஆந் திகதிவரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இப்பரீட்சை 2012, வைகாசி மாதத்தில் கொழும்பில் நடைபெறும்.

1. தகைமைகள்:-

இப்பரீட்சைக்காக விண்ணப்பதாரிகள் கீழ் வரும் தகைமைகளைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் :- 

(i) இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்

(ii) வயது 25 வருடங்களுக்குக் குறையாதவராக இருத்தல் வேண்டும்

(iii) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதத்துடன் மொழி உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

(iஎ) சாரதி ஆலோசகராக தான் விண்ணப்பிக்கும் வகுப்பு வாகனங்களை ஓட்டுவதற்கு விண்ணப்பத் திகதிக்குக் குறைந்தது 05 வருடங்களுக்கு முன்னதாகப் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை அவர் கொன்டிருத்தல் வேண்டும்.

(அரசஃ கூட்டுத்தாபனமொன்றிலோ அல்லது நியதிச் சட்ட சபை ஒன்றிலோ பதவி வகிக்காதவராக இருத்தல் வேண்டும்)

2. பரீட்சை முறை:-

(அ) இப்பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும். (விண்ணப்பதாரிகள் தகைமை பெற்ற மொழியில்) 

(ஆ) சகல வினாப்பத்திரங்களும் ஒரு மொழியில் மாத்திரம் விடை அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பரீட்சைக்கான மொழி மூலம் பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

3. பரீட்சைக் குறிய பாடங்கள்:-

இப்பரீட்சை மோட்டார் வாகன போக்குவரத்து முகாமைத்துவம் பற்றிய இரு பிரிவுகளைக் கொண்ட வினாத்தாள்களை உள்ளடக்கியதாகும்.

(i) மோட்டார் வாகன போக்குவரத்து முகாமைத்துவம் – 1 (1 மணித்தியாலம்)
(ii) மோட்டார் வாகன போக்குவரத்து முகாமைத்துவம் 2 (2 மணி 30 நிமிடம்)
முதலாம் வினாத்தாள் 50 பன்முகத் தெரிவு வினாக்களை உள்ளடக்கியதாகவும், இரண்டாம் வினாத்தாளில் முதலாம் வினா, சுருக்கமான விடையளிக்கும் கட்டாய வினாவாகவும், ஏனைய நான்கு வினாக்களுக்குமாக அனைத்து (05) வினாக்;களுக்கும் விடையளிக்கப்படல் வேண்டும்.

4. பாடத்திட்டம்.-

இவ்வினாப்பத்திரங்கள் இரண்டிலும் இலங்கையின் வீதிப் போக்குவரத்து சட்ட திட்டங்கள், மோட்டார் வாகன தொழில்நுட்ப அறிவு, வாகனம் செலுத்தும் ஆற்றல் என்பன பற்றிய வினாக்கள் அடங்கும்.

இவ்வினாத்தாள் கீழே குறிப்பிட்டுள்ள விடயங்களை உள்ளடக்கிய தாக இருக்கும் :-

  • ஓட்டுனர் ஒருவரது பண்பு: சிறந்த ஓட்டுனர் ஒருவரால் மட்டுமே சிறந்த பயிற்றுனராக இருக்க முடியும்
  • ஆசிரியர் ஒருவராக, வாகனப் பயிற்றுனர் ஒருவரின் பொறுப்பு, மனப்பாங்கு, திறமைகள் என்பன ;
  • மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனப் பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் வாகனப் பயிற்றுனர்கள் தொடர்பான ஏற்பாடுகள் ;
  • மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் நிர்மாணங்கள் தொடர்பான அறிவு
  • பெருந்தெரு ஒழுங்குவிதிகளும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் பற்றிய அறிவும் ;
  • மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் நிர்மாணங்கள் : வாகன ஓட்டுனர் பயிற்சியாளர் மற்றும் பயிற்சிப் பாடசாலைகளுக்கு அமைவான ஒழுங்குவிதிமுறைகள் ;
  • வாகனம் ஓட்டும் பயிற்சி கைநூல், வாகனப் பயிற்சி ஆலோசனைக் கைநூல் மற்றும் அவற்றின் பாடத்திட்டம் ;
  • வாகன பராமரிப்பு, வாகன செயன்முறை மற்றும் வாகனத்தின் பிரதான இயந்திர தொழினுட்பவியல் தொடர்பான அறிவு –
  • இயந்திரம் மற்றும் இயந்திர சக்கரப் பொறிமுறை சாதனம் தொடர்பான அறிவு
  • வாகனத்தை இயக்கும் சுக்கான் (ளுவநநசiபெ றாநநட) தொடர்பான அறிவும் அதன் செயற்பாடும்
  • சமநிலைப்படுத்தும் பொறிமுறை (ளுரளிநளெழைn) மற்றும் அதன் செயற்பாடும்
  • வாகன இயக்கத் தடை (டீசநயம ளலளவநஅ) பற்றிய அறிவும் அதன் செயற்பாடும் ;
  • மின்சார முறைமை பற்றிய அறிவும் அதன் செயற்பாடும்.

5. தெரிவு செய்யும் முறை.-

எழுத்து மூலப்பரீட்சையில் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் 40மூ அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு, தகைமைகள் பரீட்சித்துப் பார்க்கப்படும். நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் செய்முறைப் பரீட்சைக்கு உட்படுத்தப்படுவர்.

6. விண்ணப்பிக்கும் முறை.-

(அ) விண்ணப்பப்பத்திரம் இவ்வறி வித்தலில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை ஒத்ததாக அமைந்திருக்க வேண்டியதுடன், அது 8½” ஓ 12″ அளவுகளில் முழுத்தாளின் (கழழடளஉயி) இரு பக்கங்களையும் உபயோகித்து விண்ணப்பதாரியால் ப{ரணப்படுத்தப்படல் வேண்டும்.

(ஆ) விண்ணப்பப்படிவம், விண்ணப்பதாரி பரீட்சைக்குத் தோற்றுவ தற்கு எண்ணியுள்ள மொழியிலேயே ப{ரணப்படுத்தப்படல் வேண்டும்.

(இ) பரீட்சைக்காகப் ப{ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம், பதிவுத் தபால் மூலம் 2012.02.14 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்போ ”பரீட்சை ஆணையாளர் நாயகம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், பெலவத்த, பத்தரமுல்ல”” என்னும் முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும்.

கடித உறையின் மேல் இடது பக்க மேல் மூலையில் “சாரதி ஆலோசகர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான எழுத்து மூலப்பரீட்சை” என்று தெளிவாக எழுதப்படல் வேண்டும்.

முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் எந்த ஒரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

(ஈ) பரீட்சைக் கட்டணம் ரூபா 1500 ஆகும். இக்கட்டணமானது மாவட்டஃ பிரதேச செயலகத்திற்கு, “மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் இல. 2003-02-14” என வைப்பிலிடக்கூடிய வகையில் செலுத்தப்படுதல் வேண்டும்.

இக்கட்டணத்திற்கான பற்றுச்சீட்டு (ரசீது) விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்படுதல் வேண்டும். இப்பற்றுச் சீட்டின் நிழற்பிரதி ஒன்று விண்ணப்பதாரியிடம் இருத்தல் வேண்டும். மாதிரி விண்ணப்பப் படிவத்தை ஒத்திராத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும் என்பதால், ப{ர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மாதிரி விண்ணப்பப்படிவத்துடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது அவசியம்.

(உ) விண்ணப்பப்படிவத்தில், விண்ணப்பதாரியின் கையொப்பம் அரசாங்க பாடசாலை ஒன்றின் அதிபர் அல்லது சமாதான நீதவான் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளர் அல்லது சட்டத்தரணி அல்லது பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது படைகளின் கட்டளையிடும் தரத்திலுள்ள அதிகாரி ஒருவர் அல்லது வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர் அல்லது ரூபா 2,40,360 இற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளம் பெறும் அரசாங்க நிரந்தர பதவி வகிக்கும் உத்தியோகத்தர் ஒருவரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

(ஊ) முழுமையாகப் ப{ர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு. தபால் மூலம் அனுப்பும் போது ஏற்படும் தாமதம் அல்லது விண்ணப்பம் தொலைந்து போதல் போன்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் எந்த முறைப்பாடுகளும் கவனத்திற்கு எடுக்கப்படமாட்டாது.
(எ) விண்ணப்பம் கிடைத்தமை பற்றி விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை அனுமதி அட்டை அனுப்பப்பட்டவுடன் செய்தித்தாள்களில் அது பற்றிய அறிவித்தல் வெளியிடப்படும். அப்படியான அறிவித்தல் பற்றி அவதானிப்புடன் இருக்குமாறு விண்ணப்பதாரிகள் அறிவுறுத்தப் படுகின்றனர். பரீட்சைத் திகதிக்கு 07 நாட்களுக்கு முன்னர் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் பின்வரும் விபரங் களுடன் உடனடியாக பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும் :-

(i) பரீட்சையின் பெயர்:-
(ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர்:-
(iii) முகவரி:-
(iv) விண்ணப்பம் தபால் மூலம் அனுப்பப்பட்ட திகதி:-
பதிவுத் தபால் இலக்கம்:-
தபாற் கந்தோர்:-

(v) கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டின் (ரசீது) உறுதிப்படுத் தப்பட்ட பிரதி மற்றும் கொழும்பிற்கு வெளிப்பிரதேசமாயின் அனுமதி அட்டையினை அனுப்புவதற்கு தொலைநகல் (பெக்ஸ்) இலக்கம் ஒன்றினைக் குறிப்பிடுவது நல்லது.

7. விண்ணப்பதாரியின் பரீட்சைக்கான ஆளடையாளம்.- விண்ணப்பதாரி தான் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் பரீட்சை மேற்பார்வையாளர் திருப்தியுறும் வகையில் பரீட்சை மண்டபத்தில் தனது ஆளடையாளத்தை நிரூபிக்க வேண்டும். இதற்காகப் பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் :-

(i) தேசிய அடையாள அட்டை ;
(ii) செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

8. விண்ணப்பதாரிக்கு அனுப்பப்படும் அனுமதி அட்டையானது அவர் பரீட்சைக்கு தகுதியானவர் என்பதனை உறுதிப்படுத்துவதாக அமையாது.
9. விண்ணப்பதாரி, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் கீழ்ப்படிதல் வேண்டும்.

இவற்றை மீறும் பட்சத்தில் பரீட்சை ஆணையாளரால் வழங்கப்படும் தண்டனைக்கு உட்படுவர்.

 

Leave A Reply

Your email address will not be published.