Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

வெளிவிவகார அமைச்சு

1

இலங்கை வெளிநாட்டு சேவையின் 3 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

இலங்கை வெளிநாட்டு சேவையின் 3 ஆம் தரத்திற்கு (இதன் பின்னர் ”சேவை”” எனக் குறிப்பிடப்படும்) பொருத்தமான பரீட்சார்த்திகளைச் சேர்த்துக்கொள்வதற்கான பரீட்சையொன்று அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சார்பாக பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் கொழும்பில் நடாத்தப்படும்.

(iii) உலக விவகாரங்கள் 2 (பொருளாதாரம்) ;
(iஎ) கட்டுரை ;
(எ) சுருக்கி எழுதுதல் ;
(எi) நுண்ணறிவும் பொது அறிவும் (பல்தேர்வு வினாக்கள்). பகுதி ஐஐ – நேர்முகத் தேர்வு:

விண்ணப்பதாரர் எழுத்துமூலப் பரீட்சையில் ஆறு வினாத்தாள்களுக்கும் தோற்றி ஒவ்வொரு பாடத்திலும் 40… இற்குக் குறையாத மொத்தப் புள்ளிகளாக 300 புள்ளிகளுக்குக் குறையாத வெளிவிவகார அலுவல்கள் அமைச்சு செயலாளரினால் தீர்மானிக்கப்படும் வெட்டுப்புள்ளி அளவுக்கு அல்லது அதற்கு கூடுதலான புள்ளிகளைப் பெற்ற பரீட்சார்த்திகள் மாத்திரம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

எவ்வாறாயினும் அழைக்கப்படும் பரீட்சார்த்திகளின் தொகை நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையின் ஐந்து மடங்கிற்கு மேற்படுதலாகாது. நேர்முகத் தேர்வுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும். எச்சந்தர்ப்பத்திலும் ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்படுதலாகாது.

3. சேவைக்கமர்த்தும் நியதிகள்.-

(அ) இப்பரீட்சையின் பெறுபேறுகள் மூலம் தெரிவாகும் பரீட்சார்த்திகள் அரசாங்க சேவையின் நியமனங்களுக்கான பொதுவான நிபந்தனைகள் மற்றும் 2001 ஆம் ஆண்டின் இலங்கை வெளிநாட்டுச் சேவையின் பிரமாணக் குறிப்புகள் அல்லது அதன்பின் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அல்லது மேற்கொள்ளப்போகும் திருத்தங்களுக்கு அமைய இலங்கை வெளிநாட்டு சேவையின் ஐஐஐ ஆம் தரத்திற்கு நியமனம் பெறுவர்.
(ஆ) பதவி நிரந்தரமானதும் ; ஓய்வ{திய உரித்துடையதுமாகும்.

4. சம்பள அளவுத்திட்டம் (மாதாந்தம்) :

ழூ இச்சேவைக்கு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 06ஃ 2006 இன் எஸ்எல் 1-2006 சம்பள அளவுத்திட்டத்திற்கு ஏற்புடையதாகும். இச்சம்பள அளவுத்திட்டம் பின்வருமாறு :

ரூபா 22,935-10ஒ645-8ஒ790-17ஒ1,050-ரூபா 53,555 (மாதாந்தம்)
ழூ வெளிநாட்டுச் சேவையின் தரம் ஐஐஐ ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பின்வரும் மாதாந்த சம்பள நிலையை அடையமுன் மூன்று வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை களில் சித்திபெறல் வேண்டும் :
முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை.- ரூ. 24,870 என்ற சம்பள நிலையை எய்துமுன்னர்

இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை.- ரூ. 27,450 என்ற சம்பள நிலையை எய்துமுன்னர்

மூன்றாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை.- ரூ. 31,965 என்ற சம்பள நிலையை எய்துமுன்னர்

ழூ பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை 20ஃ 2001 பிரகாரம் முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை மூன்று (03) வருடத்தினுள்ளும் இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை ஆறு (06) வருடத்தினுள்ளும் சித்திபெறல் வேண்டும்.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை 07ஃ 2007 பிரகாரம் அரசாங்க சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்படும் உத்தியோ கத்தர்கள் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்படும் அரச மொழிக்கு மேலதிகமாக ஏனைய அரச மொழிகளில் சேவைக்கு சேர்ந்து 5 வருடங்களுக்குள் தேர்ச்சிபெறல் வேண்டும்.

5. ஆரோக்கியமும் நல்லொழுக்கமும்.- விண்ணப்பதாரர் தான் திடமான ஆரோக்கியத்துடனும் நல்லொழுக்கம் உடையவராக உள்ளார் என்பதனை வெளிவிவகார அமைச்சு செயலாளருக்குத் திருப்திப் படுத்தல் வேண்டும். அவர் உலகின் எப்பகுதியிலும் சேவையாற்று வதற்குரிய உடல்நிலை உள்ளவராக இருத்தல் வேண்டும். தெரிவு செய்யப்படுவோர் விசேட மருத்துவ பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தப்படுவர்.

6. தகைமை.- விண்ணப்பதாரர்-

(அ) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும் ;
(ஆ) (i) இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் பல்கலைக்
கழகத்தில் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

அல்லது 

(ii) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழக மொன்றில் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். நேர்முகப் பரீட்சையின்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆவண அத்தாட் சியை சமர்ப்பித்தல் வேண்டும்.

(இ) விண்ணப்ப முடிவுத் திகதியன்று 22 வயதை உடையவராக வும் 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் ஒருவர் ஏற்கனவே அரச சேவையில் உள்ளாரெனில் அவர் விண்ணப்ப முடிவுத் திகதியன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் அவரது சேவைக்காலம் திருப்திகரமான பதிவுகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்புகள்.-

(i) மேலே கூறப்பட்ட சரத்து 6(இ) இன் பிரகாரம், ஏற்கனவே அரச சேவையில் உள்ளாரென்பது (தாபனக்கோவையின் அத்தியாயம் 1 இல் குறிப்பிடப்பட்டபடி), விண்ணப்ப முடிவுத் திகதியன்று மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள விண்ணப்பதாரர் தனது சேவையில் உறுதிப்படுத்தப்பட்டவர் என்பதாகும்.

(ii) விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முதல் முன்னுள்ள ஐந்து வருட அரச சேவைக் காலப்பகுதியில் திருப்திகரமான சேவைப் பதிவுகளை அற்றவர் அல்லது ஐந்து வருட சேவைக்கு குறைந்த காலத்தை உடையவராயின் அவர் தனது முழு அரச சேவைக் காலத்திலும் திருப்திகரமான சேவைப் பதிவை அற்றவராயின் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதியற்றவராவார்.

(iii) அரச சேவையில் உள்ள ஒருவர் திருப்திகரமான சேவையை உடையவர் என்பது அவர் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முதல் முன்னுள்ள ஐந்து வருடக் காலப்பகுதிக்குரிய தனது சம்பள உயர்ச்சியை உரிய காலங்களில் தவறாது பெற்றுள்ளார் என்பதும் அல்லது ஒருவர் தான் சேவையாற்றிய தாபனங்களில் ஐந்து வருட சேவைக் காலத்திற்குக் குறைவாயின் அம்முழுக் காலத்திற்கும் உரிய சம்பள உயர்ச்சியை பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் அக்காலப்பகுதியில் குற்றங்கள் தண்டனைகள் எதுவும் (எச்சரிக்கை தவிர) பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.

(iஎ) ஏற்கனவே அரச சேவையில் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் திணைக்களஃ தாபனத் தலைவர் ஊடாக அனுப்புதல் வேண்டும்.

7. பரீட்சைக் கட்டணம்.-

ரூபா 1,000 ஆகும். விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னதாக அண்மையிலுள்ள மாவட்ட செயலகத்தில், பிரதேச செயலகத்தில் அல்லது கொழும்பிலுள்ள திறைசேரியின் வருமானத் தலைப்பு 2003-02-13 என்ற கணக்கிற்கு செலுத்தப்படல் வேண்டும்.

இக்கொடுப்பனவிற்காக பெறப்படும் பற்றுச்சீட்டை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்தல் வேண்டும். இதன் பிரதியொன்றை வைத்திருப்பது பிரயோசனப்படலாம்.

குறிப்பு.-

விண்ணப்பதாரர் ஏதாவது காரணங்களின் நிமித்தம் பரீட்சையிலிருந்து வாபஸ் பெற்றாலோ அல்லது பரீட்சைக்குத் தோற்றி ஆனால் தகுதியற்றவர் எனக் காணுமிடத்து அவரது பரீட்சைக் கட்டணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீளப்பெற முடியாது.

8. விண்ணப்பிக்கும் முறைமை.-

(அ) விண்ணப்பப்படிவத்தை இவ்வறிவித்தலின் மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கேற்ப, விண்ணப்ப தாரர்கள் தாங்களே 8.5 அங்குலம் ஒ 11.6 அங்குலம் (யு4) அளவிலான கடதாசியின் இரு பக்கங்களிலும் தயாரிக்க வேண்டும். இல. 1-7 வரையிலான பந்திகள் விண்ணப்பத்தின் முன்பக்கத்திலும் ஏனையவை 2 ஆம் மற்றும் 3 ஆம் பக்கங்களில் வரக்கூடியதாக தயாரிக்கப்படல் வேண்டும். விண்ணப்பம் விண்ணப்பதாரரின் சொந்தக் கையொழுத்தால் நிரப்பப்படல் வேண்டும்.

மாதிரி விண்ணப்பப்படிவத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தயாரிக்கப் படாத மற்றும் உரிய முறையில் ப{ரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தின் பிரதியொன்றை வைத்திருப்பது பிரயோசனப்படலாம். விண்ணப்பம் மாதிரிப்படிவத்தில் காட்டியுள்ளமை போன்று அனுப்பப்படல் வேண்டும். இன்றேல் அவை நிராகரிக்கப்படும். விண்ணப்பம் தயாரிக்கும்போது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான விண்ணப்பங்களின் தலையங்கம் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

(ஆ) விண்ணப்பதாரர் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொழியிலேயே விண்ணப்பப்பத்திரம் தயாரிக்கப்பட வேண்டும்.

(இ) பரீட்சைக்கான ப{ர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவம், ”பரீட்சை ஆணையாளர் நாயகம், பரீட்சைத் திணைக்களம் (ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் பிரிவு), பெலவத்தை, பத்தரமுல்லை”” என்ற முகவரிக்கு 2012, மாச்சு 09 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பத்தைக் கொண்டிருக்கும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”இலங்கை வெளிநாட்டுச் சேவையின் ஐஐஐ ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2012″” என எழுதப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன் இடதுபக்க மேல் மூலையில் (2ஒ2 செ. மீ.) ஒரு கூண்டு தயாரிக்கப்பட்டு அதனுள் ஆங்கில எழுத்து ‘ளு” எழுதப்பட வேண்டும். இம்முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 

(ஈ) முற்றிலும் ப{ர்த்திசெய்யப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கு இடமுண்டு. தபாலில் காணாமற்போன அல்லது தாமதமான விண்ணப்பங்கள் பற்றிய முறைப்பாடுகள் கவனத்திற்கு எழுத்துக் கொள்ளப்பட மாட்டாது

(உ) விண்ணப்பம் கிடைக்கப்பெற்றது குறித்து அறிவிக்கப்பட மாட்டாது. அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டவுடன் அதுபற்றிய அறிவித்தல் ஒன்று பத்திரிகைகளில் வெளியிடப்படும். பத்திரிகை அறிவித்தல் பற்றி விழிப்பாக இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்கப்படுகின்றனர்.

(ஊ) பத்திரிகை விளம்பரத்தின் பின் 2 அல்லது 3 நாட்களுக்குள் அனுமதி அட்டை கிடைக்காதவிடத்து விளம்பரத்தில் குறிப்பிட்டவாறு உடனடியாகப் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவிக்கும்போது அனுப்பிய விண்ணப்பப்பத்திரம், காசு கட்டிய பதிவுத்தபால் பற்றுச்சீட்டு ஆகியவற்றின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதிகளுடன் கொழும்பிற்கு வெளியே வசிப்பவராயின் அனுமதி அட்டை அனுப்பக்கூடிய தொலைநகல் இலக்கத்தையும் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்தல் சாலச்சிறந்தது.

9. பரீட்சைக்கு அனுமதித்தல்.- (அ) பரீட்சைக்குத் தோற்ற தகுதி பெற்ற விண்ணப்பதாரருக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுமதி அட்டைகளை வழங்குவார். பரீட்சைக்கு சமுகமளிக்கும் விண்ணப்பதாரர் தனது அத்தாட்சிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டையை பரீட்சை நிலைய மேற்பார்வையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதி அட்டையைச் சமர்ப்பிக்கத் தவறும் விண்ணப்பதாரர் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார். விண்ணப்பதாரர் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பரீட்சை சம்பந்தமான விதிகள் மற்றும் ஒழுங்குகளுக்கு கட்டுப்பட கடப்பாடு உடையவராவார்.

இவ்விதிகளை மீறுமிடத்து பரீட்சார்த்திகள் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் விதிக்கப்படும் தண்டனைக்குள்ளாவார்.
(ஆ) ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சைக்கு சமுகமளிக்கும் முதல் நாளன்று அப்பரீட்சை மண்டபத்திற்கான அனுமதி அட்டையை பரீட்சை மேற்பார்வையாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

பரீட்சார்த்தி ஒருவர் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்திலேயே பரீட்சை எழுத வேண்டும். பரீட்சார்த்திகளால் பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிக் கோவையொன்று இவ்வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு.- பரீட்சார்த்தி ஒருவருக்கு அனுமதி அட்டை வழங்கப்படுவது அவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வர்த்தமானிப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட சகல தகைமைகளையும் கொண்டவர் என்னும் கருத்தை பிரதிபலிக்காது.
10. பரீட்சார்த்தியின் அடையாளத்தை நிரூபித்தல்.- ஒரு பரீட்சார்த்தி தோற்றும் ஒவ்வொரு பாடத்தின்போதும் தனது ஆளடையாளத்தை பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டப்படுவர். இதற்கான பின்வரும் ஏதேனும் ஒரு சான்றுப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் :

(1) ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளரால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ;
(2) செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
11. பொய்யான தகவல்களை வழங்கியமைக்கான தண்டனை.- பரீட்சார்த்தி ஒருவர் எச்சந்தர்ப்பத்திலாவது, பரீட்சைக்கு முன்போ, பரீட்சை நடக்கும்பொழுதோ அல்லது பரீட்சைக்குப் பின்னரோ தகுதியற்றவர் எனக் காணப்படுமிடத்து அவரது விண்ணப்பம் இரத்துச்செய்யப்பட இடமுண்டு.

பரீட்சார்த்தி கொடுத்துள்ள தகவல்கள் ஏதாவது அவர் அறிந்தவரை உண்மை அற்றதெனக் காணப்பட்டால் அல்லது அவர் வேண்டுமென்றே உண்மைத் தகவல்களை மறைத்திருந்தால் அவர் அரசாங்க சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் இடமுண்டு.

12. பரீட்சை மொழி.- (அ) பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படும்.

(ஆ) பரீட்சார்த்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு மொழியில் பரீட்சைக்குத் தோற்றலாம்.

எனினும் பரீட்சார்த்தி தான் தேர்ந்தெடுத்த ஒரு மொழியிலேயே பரீட்சையின் எல்லாப் பாடங்களையும் எழுத வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி பின்னர் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட முடியாது என்பதை கவனத்திற்கொள்ளவும்.

13. பரீட்சை முறைமை.-

(அ) பகுதி 1-

எழுத்துமூலப் பரீட்சை, இது பின்வரும் ஆறு (6) பாடங்களைக் கொண்டிருக்கும் :

எழுத்துப் பரீட்சைக்கான பாடத்திட்டம்.- (i) பொது வினாத்தாள்.- இவ்வினாத்தாள் இலங்கை அரசியல், சமூக, கலாசார, பொருளாதாரச் சூழல் நடப்பு தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய விடயங்கள் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்திகள் என்பன தொடர்பில் பரீட்சார்த்தியின் அறிவைப் பரீட்சிப்பதாகும்.

(ii) உலக விவகாரங்கள்

ஐ.- இவ்வினாத்தாள் உலக நோக்கான சமாதானம், பாதுகாப்பும் நாட்டு முன்னேற்றமும் மற்றும் இவை இலங்கைக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்து கின்றன என்பனவற்றையிட்டு ஆராய்ந்து கிரகிக்கும் தன்மையை பரீட்சார்த்தி கொண்டுள்ளாரா என்பதனை பரீட்சிப்பதன் நோக்கில் உலகில் இன்றைய அரசியல் வளர்ச்சி, ஐக்கிய நாடுகள் சபை, அரசாங்கங்களுக்கிடையேயான தாபனங்கள், முரண்பாட்டு சூழ்நிலைகள் மற்றும் தேசிய, சர்வதேச இயக்கங்களின் வளர்ச்சி என்பனவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.

(iii) உலக விவகாரங்கள் ஐஐ.-

இவ்வினாத்தாள் அண்மைக் காலத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார முன்னேற்றப் போக்குத்துறையில் சர்வதேச, அரசாங்கங்களுக்கிடையேயான தாபனங்கள் ஆற்றிய பங்களிப்பு, பிராந்திய பொருளாதார கூட்டமைப்புக்கள் ஏற்படுத்தும் தாக்கம், சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தியும் இவை இலங்கைக்கு எவ்வகையில் சம்பந்தப்படுகின்றது போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.

(iஎ) கட்டுரை.- குறித்துரைக்கப்பட்ட விடயம் பற்றி அல்லது பல விடயங்கள் பற்றி கட்டுரை எழுத வேண்டும்.

இவ்விடயங்கள் கற்கைத்துறையின் ஏதேனும் விடயம் தொடர்புபட்டதாக இருக்க மாட்டாது. பரீட்சார்த்தியின் பொது அறிவும் சிந்தனையிலும் கருத்தை வெளிப்படுத்துவதிலும் உள்ள பொது ஆற்றலையும் பரீட்சிப்பதற்கானதாக அது அமையும்.

கட்டுரை எழுதுவதில் சுயமான கருத்துக்களை அறிமுகப் படுத்தும் திறமை, சுய ஆக்கம், மொழி நடை, அதன் அமைப்பு ஆகியவை மூலம், கட்டுரையின் தன்மை என்பனவும் கணிக்கப்படும்.

அது தெளிவாகவும் பிழைகள் இன்றியும் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

குறிப்பு.- விடயத்திற்கு உகந்த தன்மையும் தெளிவாகவும் இருத்தலின் அவசியம் பரீட்சார்த்திகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது.

விடயத்தை பகுத்து ஆராய்ந்து அறிகின்ற சிந்தனை, தரமான எழுத்து மற்றும் தெளிவும் விளக்கமும் உள்ள கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் உண்டு.

(எ) சுருக்கி எழுதுதல்.-

ஒரு கொடுக்கப்பட்ட பந்தியின் கருத்தைப் புரிந்துகொள்ளும் திறமை மற்றும் அதனை திறமையாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தக்கூடிய திறமையைப் பரீட்சிப்பதற்காக இவ்வினாத்தாள் அமைந்திருக்கும்.

(எi) நுண்ணறிவும் பொது அறிவும்.- இவ்வினாத்தாள் பின்வரும் பிரிவுகளைக் கொண்ட இரு பாகங்களைக் கொண்டிருக்கும். இவ்வினாக்கள் பொருள் அமைந்த வினாக்களாக அமைவதுடன் ஒவ்வொரு பகுதிக்கும் 50 புள்ளிகள் வழங்கப்படும் :-

(அ) நுண்ணறிவு.-

பரீட்சார்த்தியின் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலையும் பகுத்தறிவுத் திறனையும் மதிப்பீடு செய்வதற்கான வினாத்தாளாகும்.
(ஆ) பொது அறிவும் நடப்பு விவகாரங்களும்.- உள்~ ரிலும் சர்வதேச அரங்கிலும் காணப்படும் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரம் ஆகிய துறைகளிலான நடப்பு அபிவிருத்திகள் பற்றி பரீட்சார்த்தியின் அறிவைப் பரீட்சிப்பதற்கான வினாத்தாளாகும்.

14. நேர்முகத் தேர்வு.-

பொது விடயங்கள் சம்பந்தமாகப் பரீட்சார்த்தியுடன் நேர்முக உரையாடல் நடைபெறும். பரீட்சார்த்தி பொறுப்பேற்க உள்ள பதவிக்குப் பொருத்தமானவரா என அவரது தகுதியை எடைபோடுவது இந்நேர்முகப் பரீட்சையின் நோக்கமாகும்.

விண்ணப்பதாரரின் விவேகம், மனவிழிப்பு ஆளுமையில் அவரது தகைமை மற்றும் ஒழுக்கத்திறன் என்பவற்றை நேரில் அறிந்து கொள்வதில் சபை முனையும். பரீட்சார்த்தியின் பிறநாட்டு மொழி களிலான தகைமை உயர்தர கல்வித்தகைமை மற்றும் கணனி அறிவு என்பனவும் நேர்முகப் பரீட்சையின்போது கவனத்திற்கொள்ளப்படும். நேர்முகப் பரீட்சையின் புள்ளியிடல் செயற்திட்டம் கீழ்வருமாறு அமையும் :-

15. நியமனத்திற்கு தெரிவுசெய்யும் முறை.-

எழுத்துமூலப் பரீட்சையில் பெற்ற மொத்தப் புள்ளிகளுடன் நேர்முகப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளும் கூட்டப்பட்டு பெற்ற முழுப்புள்ளிகளின் அடிப்படை யில் நியமனம் வழங்குவதற்கான இறுதி முடிவு அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.

16. இந்த வர்த்தமானி அறிவித்தலில் வழங்கத் தவறிய விடயங்கள் ஏதும் இருப்பின் அவை அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவின தீர்மானத்திற்கமைய செயலாற்றப்படும். வெற்றிடங்களை முழுமையாக அல்லது பகுதியாக அல்லது நிரப்பாமல்விட அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு.

Leave A Reply

Your email address will not be published.