Health Tips for a Healthy Lifestyle Blog collects information on Health Care Tips, Daily Health Tips for Women, Men, Children

சிறு ஏற்றுமதி பயிர்கள் மேம்பாட்டு அமைச்சு

1

இலங்கை தொழிநுட்ப சேவையின் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் ஐஐ ”ஆ”” வகுப்பின் ஆராய்ச்சி உதவியாளர்

பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2012
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையில் மேற்குறித்த பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2. விண்ணப்பதாரிகள் 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். ஏற்கனவே அரச சேவையில் மற்றும் மாகாண அரசாங்க சேவையில் பணியாற்றுபவர்களுக்கு இவ் உச்ச வயதெல்லை ஏற்புடையதாக மாட்டாது.

போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அனுமதி அட்டையொன்று வழங்கப்படுவது அவருக்கு பரீட்சை எடுப்பதற்குத் தேவையான தகைமைகள் உண்டென ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட மாட்டாது. விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம

தகைமைகள் உள்ளதா எனப் பரீட்சிக்கும் வேளையில் தேவையான தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதாக வெளிப்படுத்தப் பட்டால் அவ்வேளையிலேயே அவரது பரீட்சார்த்தி தன்மை இரத்துச் செய்யப்படும்.

3. இப்பதவிக்காக பொது நிர்வாக சுற்றுநிருபம் 6ஃ 2006 (ஐஏ) இன் பிரகாரம் மாதாந்த சம்பள அளவுத் திட்டம் ரூபா 15,005-4 ஒ 180- 6 ஒ 240 – 11 ஒ 320 – 20 ஒ 360 – ரூபா 27, 885 உரித்தாகும்.

4. இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வ{திய உரித்துடையதுமாகும். விதவைஃ தபுதாரர் மற்றும் அனாதை ஓய்வ{தியத் திட்டத்திற்கு பங்களிப்புச் செலுத்தல் வேண்டும்.

5. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியில் விண்ணப்பதாரிகள் கீழ்வரும் அடிப்படை கல்வித் தகைமைகளையும் துறைசார் தகைமையையும் பெற்றிருத்தல் அவசியமாகும்.

கல்வித் தகைமைகள்.-

க. பொ. த. (சா. த.).- இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் க. பொ. த. (சாதாரண தர) பரீட்சையில் சிங்களம்ஃ தமிழ் மொழி அல்லது இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் இன்னுமொரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் ஆறு (6) பாடங்களில் சித்திபெற்றி ருத்தல் ; 

க. பொ. த. (உ. த.).- உயிரியல்ஃ விலங்கியல், தாவரவியல், விவசாயம், இரசாயனவியல், பௌதிகவியல் ஆகியவற்றில் இரண்டு பாடங்களுடன் விஞ்ஞான பாடங்கள் மூன்றுடன் க. பொ. த. (உ. த.) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் ;

துறைசார் அல்லது வேறு தகைமைகள்.-

அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற விவசாயம் தொடர்பான இரண்டு வருட டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.

6. விண்ணப்பிக்கும் முறை :

(அ) இவ்வறிவித்தலின் இறுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தின் பிரகாரம் ஏ4 (21உஅ ஒ 29உஅ) அளவுடைய தாளின் இரு பக்கங்களையும் உபயோகித்து 1 முதல் 5 வரையான பந்திகள் முதல் பக்கத்தில் வரும் வகையில் விண்ணப்பம் தயாரிக்கப்பட வேண்டும்.

(ஆ) விண்ணப்பப்படிவத்தை தயாரிக்கும்போது அதன் தலைப்பில் பரீட்சையின் பெயர் சிங்கள விண்ணப்பப்படிவங்களில் சிங்களத்திற்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும் தமிழ் விண்ணப்பப்படிவங்களில் தமிழுக்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும் இடப்படல் வேண்டும்.

(இ) முறையாக ப{ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 2012.02.29 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ”பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டு பரீட்சைகள் பிரிவு, இலங்கை பரீட்சைகள் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை”” எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

(ஈ) விண்ணப்பங்களை இட்டு அனுப்பும் கடிதவுறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தெளிவாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

(உ) பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு 2003-02-13 இற்கு செலவு வைத்து பரீட்சைக் கட்டணமாக ரூபா 300 ஐ நாட்டின் எந்தவொரு மாவட்ட அல்லது பிரதேச செயலகமொன்றில் செலுத்திப் பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டை விண்ணப்பப்படிவத்தில் உரிய இடத்தில் ஒட்டுதல் வேண்டும். அப்பற்றுச்சீட்டின் நிழற்பிரதியொன்றை தம்வசம் வைத்திருத்தல் பயன்படக்கூடும்.

(ஊ) முறையாகப் ப{ரணப்படுத்தப்படாத விண்ணப்பப்படி வங்களும் தாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பப்படிவங்களும் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படுவதுடன், தபாலில் காணாமல் போதல், தாமதமாகக் கிடைத்தல் தொடர்பாக திணைக்களம் பொறுப்பேற்காது.

(எ) அரச பாடசாலையொன்றின் அதிபர் அல்லது சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி அல்லது அரச சேவையில் பதவிநிலை பதவியொன்றினை வகிக்கும் அலுவலர் ஒருவரினால் விண்ணப்பப்படிவத்தில் பரீட்சார்த்தியின் கையொப்பத்தை அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.

(ஏ) ஏற்கனவே அரச சேவையிலுள்ள விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களைத் தமது திணைக்களத் தலைவரினூடாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

7. பரீட்சை விதிகள்.-

(அ) விண்ணப்பப்படிவங்களை அனுப்பிய சகல விண்ணப்பதாரிகளுக்கும் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அனுமதி அட்டைகள் வழங்கப்படும். பரீட்சார்த்தி ஒருவர் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையத்தில் பரீட்சை மேற்பார்வையாளருக்கு தனது கையொப்பம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

அனுமதி அட்டையை சமர்ப்பிக்கத் தவறுகின்ற எந்த ஒரு விண்ணப்பதாரிக்கும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. 

(ஆ) இப்பரீட்சை 2012, மாச்சு மாதம் அளவில் நடாத்தப்படும். பரீட்சை தினத்திற்கு 7 நாட்களுக்கு முன்னர் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் பின்வரும் விபரங்களைச் சமர்ப்பித்து தாமதிக்காமல் பத்தரமுல்ல, பெலவத்த, இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டு பரீட்சைகள் கிளையில் விசாரணைசெய்துகொள்ள வேண்டும் :-

(i) பரீட்சையின் பெயர் ;
(ii) விண்ணப்பதாரியின் முழுப்பெயர் ;
(iii) முகவரி ;
(iஎ) விண்ணப்பத்தை பதிவுத் தபாலிலிட்ட திகதியும், பதிவுசெய்த தபால் நிலையமும் இலக்கமும் ;
(எ) பரீட்சைக் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு இலக்கமும் திகதியும் பிரதேச செயலகமும்.
(இ) இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக விண்ணப்பதாரிகளுக்கு எவ்வித பிரயாணச் செலவுகளோ வேறு எந்த கொடுப்பனவுகளோ வழங்கப்பட மாட்டாது.

(ஈ) ஆளடையாளம்.- தாம் பரீட்சைக்குத் தோற்றும் சகல பாடங்கள் தொடர்பாகவும் பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சை மண்டப மேற்பார்வை யாளர் திருப்தியுறும் வகையில் தமது ஆளடையாளத்தினை நிரூபித்தல் வேண்டும். இதற்காக-

(i) ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ;
(ii) செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.

தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆவணங் களைச் சமர்ப்பிப்பதற்குத் தவறும் விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

பரீட்சார்த்தியின் தர்க்க ரீதியாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் சிந்திக்கும் ஆற்றல், தீர்மானமெடுக்கும் ஆற்றல் என்பவற்றை மதிப்பிடுவதற்கான வினாக்களைக் கொண்டது.

(ii) தொழிநுட்ப வினாத்தாள் (ஆராய்ச்சி உதவியாளர்), (பாட இலக்கம் 2).- (காலம் : 2 மணித்தியாலங்கள்)

– மொத்தப் புள்ளிகள் 100.

தொழில்நுட்ப வினாத்தாளுக்குரிய பாடப்பரப்பு.- தொழில் நுட்ப வினாத்தாள் :
(அ) விவசாயக் கோட்பாடுகள் :

(1) இலங்கையின் காலநிலை வலயங்களும் பயிர் உற்பத்தியில் அதன் தாக்கமும்

(2) மண் வகைகள், மண் பாதுகாப்பு, தாவரப் போசணை மற்றும் நீர்ப் பாதுகாப்பு

(3) பீடைகளை இனங்காணல், வகைப்படுத்தல், கட்டுப்படுத்தல்

(4) பயிர் இனப்பெருக்கம், நாற்றுமேடைப் பராமரிப்பு, இழைய வளர்ப்பு
(5) விவசாயமும் சூழலும்

(6) தோட்டச் செய்கை, வெளிக்களப் பயிர்ச் செய்கை, கலப்பு பயிர்ச்செய்கை மற்றும் விவசாயக் காடாக்கல்

(7) பின் அறுவடைத் தொழிநுட்பம்

(8) ஏற்றுமதி விவசாயப் பயிரின் பொருள் வரையறை, இனப்பெருக்கம், கள நிர்மாணம் மற்றும் பராமரிப்பு நோய் பீடைக் கட்டுப்பாடு மற்றும் அறுவடைக்கு தயார்படுத்தல்

(9) பண்ணைக் கட்டுப்பாடும் திட்டமிடலும் :

(அ) இலங்கையின் விவசாயக் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் தொடர்பான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு

(ஆ) ஆய்வுகூட உபகரணங்களை இனங் காணுதல்.- அவற்றின் உபயோகமும் அடிப்படைத் தத்துவங்களும் :

(1) ஆய்வுகூடத்தின் கண்ணாடிப் பொருட்களை இனங்காணல், பயன்பாடும் சுத்தப்படுத்தலும்

(2) ஆய்வுகூடப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தல், களஞ்சியப்படுத்தல்

(ஊ) இப்பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடாத்தப்படுவதுடன், விண்ணப்பதாரி தாம் தோற்றும் சகல வினாத்தாள்களுக்கும் ஒரே மொழி மூலத்திலேயே விடையளிக்க வேண்டும்.

(எ) இப்பதவிக்கான ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை கொழும்பில் மாத்திரம் நடாத்தப்படும்.

8. சேவையில் அமர்த்தும் நியதிகள் : (i) தெரிவுசெய்யப்படும் அபேட்சகர்கள் தீவின் எப்பகுதியிலும் சேவையாற்றத் தயாராயிருத்தல் வேண்டும்.
(ii) தற்போது வெற்றிடங்கள் காணப்படும் மாவட்டங்களும், சேவை நிலையங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன :

(i) கம்பஹா மாவட்டம் – வல்பிட்ட ஆராய்ச்சி நிலையம்
(ii) மாத்தறை மாவட்டம் – பலோல்பிட்டிய கறுவா ஆராய்ச்சி நிலையம்
(iii) மாத்தளை – மாத்தளை ஆராய்ச்சி அலகு

9. ஆட்சேர்ப்பு முறை.- போட்டிப் பரீட்சைக்குரிய சகல வினாப் பத்திரங்களும் 40… அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளில் இருந்து வெற்றிடங்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு திறமை ஒழுங்கு முறைப்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். நேர்முகப் பரீட்சையின்போது புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.

அத்துடன், தகைமைகளை உறுதிப்படுத்திய விண்ணப்பதாரிகள் போட்டிப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட உயர் புள்ளிகளின் ஒழுங்குமுறைப்படி ஆட்சேர்ப்புக்கு தெரிவுசெய்யப்படுவர்.

10. இங்கு குறிப்பிடப்படாத வேறேதும் விடயங்கள் இருப்பின் அது தொடர்பாக நியமன அதிகாரியால் தீர்மானம் எடுக்கப்படும். சகல விண்ணப்பதாரிகளும் இவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை சட்ட திட்டங்களுக்கேற்ப செயலாற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளனர்.

11. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பெற்றிருப்பவர்கள் மாத்திரம் விண்ணப்பித்துள்ளனர் எனக் கருதி, உரிய பரீட்சைக் கட்டணங்களைச் செலுத்தி குறித்த திகதியில் அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்துள்ள சகல விண்ணப்பதாரிகளும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் இடமளிக்கப்படுவர்.

 

Leave A Reply

Your email address will not be published.